Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்ப தல தோனி...ஆல் ஏரியாவிலும் ஹை லைட் தான்...ஜெர்சி மட்டும் போதும்!

Priyanka Hochumin Updated:
நம்ப தல தோனி...ஆல் ஏரியாவிலும் ஹை லைட் தான்...ஜெர்சி மட்டும் போதும்!Representative Image.

நம்ப தல டோனி ஆல் ஏரியாவிலும் கிங் என்பதை நிரூபிக்கும் விதமாக 7 ஆம் நம்பர் சிஎஸ்கே ஜெர்சியுடன் உலகக்கோப்பை கால் பந்து போட்டியில் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கத்தாரில் 22 ஆவது உலகக்கோப்பை கால் பந்து போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. அப்போது குரூப் ஜி பிரிவில் பிரேசில்- செர்பியா அணிகள் நேருக்கு நேர் மோதினர்.

முதல் பாதியில் விறுவிறுப்பான போட்டி நடைபெற்றாலும் இரண்டு அணியும் கோல் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் போட்டியில் இரண்டாம் பாதியில் முழு வீச்சுடன் களமிறங்கிய பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் கோல் அடித்துள்ளார். எனவே, போட்டியின் இறுதியில் பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியை காண வந்த இந்திய ரசிகர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து தல தோனியின் 7 ஆம் நம்பர் ஜெர்சியுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக தோனி அவர்கள் எது செய்தாலும் அது வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு டென்னிஸ் விளையாடியது மற்றும் குடும்பத்துடன் உலகக்கோப்பை கால்பந்து போட்டி பார்த்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதே போலா விராட் கோலி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் "தான் குடித்த தண்ணீர் பாட்டிலில் தோனி படத்தை பார்த்து விட்டு எங்கு பார்த்தாலும் தோனி தெரிகிறார்" என்ற பதிவையும் பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படி உலகெங்கிலும் தோனியின் படங்கள் மற்றும் அவரின் ஜெர்சி மூலம் அவரின் புகழ் பரவி கொண்டே இருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்