Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

விராட் கோலி, கவுதம் கம்பிருக்கு இடையே நடந்த மோதலுக்கு இவர் தான் காரணமா?

Priyanka Hochumin Updated:
விராட் கோலி, கவுதம் கம்பிருக்கு இடையே நடந்த மோதலுக்கு இவர் தான் காரணமா?Representative Image.

இந்த ஐபிஎல் 2023 தொடரில் மறக்க முடியாத தருணமாக மாறியது RCB அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் LSG அணியின் பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தான். தொடர்ந்து வெளிவரும் சர்ச்சைகளால் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

கடந்த மே 1 ஆம் தேதி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் RCB vs LSG-க்கு இடையே போட்டி நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. போட்டி முடிந்த பின்னர் இரண்டு அணி வீரர்களும் கை குலுக்கி விடைபெறும் போது எதிர்பாராத விதமாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பிர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. எதனால் இந்த பிரச்சனை எழுந்தது என்று பலரும் குழம்பி போயினர்.

நேற்று வெளியான வீடியோ ஒன்றில் இந்த பிரச்சனைக்கு மறைமுக காரணமாக இருந்தது LSG அணியில் இருக்கும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் தான் என்பது தெரிய வருகிறது. அவர் விராட் கோலிக்கு ஹாண்ட் ஷேக் செய்யும் போது விராட்டை வெறுப்பேற்றும் வகையில் எதையோ கூறியுள்ளார். இதனால் கடுப்பான கோலி கையை வேகமாக உதறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் விராட், கைல் மேயர்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென வந்த கவுதம் கோபமாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் இருவரும் கருத்து வேறுபாட்டில் சண்டை போட்டுக் கொண்டனர்.

மற்ற வீரர்கள் இருவரையும் அமைதி படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அந்த தருணத்தில் மீண்டும் நவீன் வந்து கடுப்பாக இருக்கும் விராட் கோலியை கோபமேற்றும் வகையில் பேசி உள்ளார். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு வீரர்கள் அவர்களை அமைதி படுத்தி அங்கிருந்து சென்றனர். விராட் கோலி மற்றும் கவுதம் கம்பிரின் செயல்பாட்டிற்கு BCCI எச்சரிக்கை விடுத்து, இருவருக்கும் அபராதம் விதித்துள்ளது.

சரி இதுதான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைத்தால், மே 3 ஆம் தேதி CSK vs LSG-க்கு இடையில் நடந்த போட்டியில் கோலியின் ரசிகர்கள் கவுதம் செல்லும் போது "கோலி, கோலி" என்று முழக்கமிட்டு அவரை கடுப்பேற்றியுள்ளனர். வீரர்கள் பிரச்சனையை தீர்க்க முயன்றாலும், ரசிகர்கள் அதனை முடிவுக்கு வர விட மாடங்கிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்