Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டுமா? வீரர்களுக்கு தோனி கடும் எச்சரிக்கை..

Nandhinipriya Ganeshan Updated:
புதிய கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டுமா? வீரர்களுக்கு தோனி கடும் எச்சரிக்கை..Representative Image.

16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே களமிறங்கினர். 

தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கான்வே 47 ரன்களுக்கும் அடுத்து வந்த துபே 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து இறுதி ஓவரின் இரண்டாம் பந்தில் களமிறங்கிய தோனி முதல் இரண்டு பந்துகளுக்கும் சிக்ஸர்களை அடித்து தள்ளினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பாராட்டை பெற்றார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

இந்த நிலையில், போட்டியின் போது லக்னோ அணிக்கு எதிராக சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மொத்தமாகவே 13 ஒய்டுகளையும், 3 நோ பால்களையும் வீசியுள்ளனர். இது ரசிகர்கள் மற்றும் பயிற்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு தோனி இது குறித்து பேசுகையில், "சென்னை அணியினர் வேகப்பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

எதிரணியின்  வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் நாம் கூடுதலாக நோபால் மற்றும் ஒய்டுகளை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோ பால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், சிஎஸ்கே அணி வீரர்கள் புதிய கேப்டன் கீழே விளையாட நேரிடும்" எனக் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்