Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஐபிஎல் 2023 சீசன் தொடங்குவது இந்த தேதியில் தான்.. பிசிசிஐ அறிவிப்பு..?

Sekar Updated:
ஐபிஎல் 2023 சீசன் தொடங்குவது இந்த தேதியில் தான்.. பிசிசிஐ அறிவிப்பு..?Representative Image.

IPL 2023 Start Date : இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) ஏலம் முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் 2023 சீசன் தொடங்கும் தற்காலிகத் தேதியை அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி ஐபிஎல் சீசன் 16, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும். வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கும் ஐபிஎல் சீசன் இந்த முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கிவதற்கு காரணம், மகளிர் ஐ.பி.எல்லின் முதல் சீசனை மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதால் தான் என பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஐபிஎல் சீசன் 16 தொடங்கும் தேதி ஏப்ரல் 1 ஆம் தேதி என்று பிசிசிஐ எழுத்துப்பூர்வ தகவல் மூலம் அணி உரிமையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. மேலும் மகளிர் ஐபிஎல் தொடக்க சீசன் மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது.

மகளிர் ஐபிஎல் 2023 23 நாட்கள் நடைபெறும். இதன் இறுதிப் போட்டி மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால்தான் ஐபிஎல் சீசன் 16 தாமதமாக ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் டி20 உலகக்கோப்பையம் 2023 பிப்ரவரியில் நடக்க உள்ள நிலையில், அது முடிந்து ஒரு வாரம் கழித்து மகளிர் ஐபிஎல்லை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் ஐபிஎல்லில் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகளுக்குப் பதிலாக, பிசிசிஐ மண்டல அடிப்படையிலான அணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு குறிப்பிட்ட மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்.

தற்போதைக்கு தரம்ஷாலா/ஜம்மு (வடக்கு), புனே/ராஜ்கோட் (மேற்கு), இந்தூர்/நாக்பூர்/ராய்ப்பூர் (மத்திய), ராஞ்சி/கட்டாக் (கிழக்கு), கொச்சி/விசாகப்பட்டினம் (தெற்கு) மற்றும் குவஹாத்தி (வடக்கு-கிழக்கு) ஆகிய பெயர்களில் அணிகளை உருவாக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மகளிர் ஐபிஎல்லை (WIPL) முதல் ஆண்டில் முழுமையாக மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளது. எனினும் இந்த முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்