Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IPL 2024: அடுத்த இந்தியன் பிரீமியர் லீக் 2024 எப்போது? ஏல தேதி மற்றும் சீசன் அட்டவணை..

Nandhinipriya Ganeshan Updated:
IPL 2024: அடுத்த இந்தியன் பிரீமியர் லீக் 2024 எப்போது? ஏல தேதி மற்றும் சீசன் அட்டவணை.. Representative Image.

இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாஸாக விளையாடி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் கவனம் 2024 சீசன் பக்கம் திரும்பியுள்ளது. 

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது?

ஐபிஎல் 2024 ஏலத்தின் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் முந்தைய சீசன்களை வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம். அதன்படி,  ஐபிஎல் 2023 ஏலம் பெங்களூரில் டிசம்பர் 16, 2022 அன்று, போட்டி தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதன் விளைவாக, ஐபிஎல் 2024 ஏலம் 2023 இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் 2024 சீசன் எப்போது?

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐபிஎல் 2024 சீசனுக்கான அதிகாரப்பூர்வமான தேதிகள் எதுவும் வெளியாகவில்லை. அதே சமயம் ஐபிஎல் 2023 சீசனுக்கான அட்டவனை கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடக்கப் போட்டிக்கு முன்னதாக பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. அந்தவகையில், அடுத்த சீசன் 2024 மார்ச் மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஐபிஎல் 2024 அணிகள் & கேப்டன் & ஸ்டேடியம்:

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ், புதிய அணியாக இருந்தாலும் 2022 ஆம் ஆண்டு அதன் தொடக்க சீசனில் குஜராத் சாம்பியன்ஷிப்பை வென்றது. தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் உள்ளது. இவருடைய கேப்டன்சியில் இந்த ஆண்டு தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இதையடுத்து, அடுத்த வருடமும் இவரே தான் இருப்பார் என்று எந்த சந்தேகமும் இல்லை.

ஸ்டேடியம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியனாகவும், ஐந்து பட்டங்களை வென்ற ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான அணியாகவும் வலம் வருகிறது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி ஓவரில் சிஎஸ்கே தோற்கடித்து ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்றது. தொடக்கத்தில் இருந்தே மகேந்திர சிங் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி, வரவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரியாததால் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினம், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. 

ஸ்டேடியம்: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை

மும்பை இந்தியன்ஸ்

5 சாம்பியன்ஷிப்களுடன், மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது. ரோஹித் ஷர்மா 2013 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவருடையை கேப்டன்சியில் மும்பை அணி ஐந்து பட்டங்களை வென்றுள்ளது. இருப்பினும், ரோஹித் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பதால் அவரது பணிச்சுமை அதிகமாக இருப்பதால் அடுத்த சீசனில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. இதனால், சூர்ய குமார் யாதவ் அல்லது இஷான் கிஷான் இருவரில் ஒருவர் அணியின் அடுத்த கேப்டனாக தலைமை தாங்கலாம்.

ஸ்டேடியம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டு சாம்பியன்ஷிப்களுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2011 முதல் 2016 வரை, கௌவுதம் கம்பீர் தவிர, இந்த அணிக்கு என்று நிலையான கேப்டன் யாரும் இல்லை. இந்த சீசனில், ஷ்ரேயாஷ் ஐயர் அணியை வழிநடத்தத் திட்டமிடப்பட்டார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதால், நித்தேஷ் ராணா தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் ஷ்ரேயாஷ் ஐயர் 2024ல் மீண்டும் அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளது. 

ஸ்டேடியம்: ஈடன் கார்டன் ஸ்டேடியம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் முன்னிலையில் RCB மிகவும் பிரபலமான IPL அணிகளில் ஒன்றாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பெங்களூர் கோப்பையை வென்றது கிடையாது. இருப்பினும், ஒரு காலத்தில் ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளே போன்ற இந்திய ஜாம்பவான்களால் தலைமை தாங்கப்பட்ட அணியாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு RCB இன் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். 2021 வரை கேப்டனாக இருந்த அவர் பதவி விலகிய பிறகு, ஃபாஃப் டுப்ளெசிஸ் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தவகையில், 2024ல் மீண்டும் ஃபாஃப் டுப்ளெசிஸ் தான் அணிக்கு கேப்டனாக இருப்பார்.

ஸ்டேடியம்: சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ல் ஐபிஎல் தொடரை வென்றது. SRH எப்போதும் ஒரு சக்திவாய்ந்த அணியாக இருந்து வருகிறது, ஆனால் ஒரு நிலையான தலைவர் இல்லாததால், அவர்கள் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கின்றனர்.. தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தான் இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்தார். இதையடுத்து அடுத்த ஆண்டும் இவரே கேப்டனாக இருக்கலாம். 

ஸ்டேடியம்: ராஜீவ் காந்தி ஸ்டேடியம், ஹைதராபாத்

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. முதலில் கிங்ஸ் 11 பஞ்சாப் (Kings 11 Punjab) என்று அழைக்கப்பட்ட இந்த அணி, 2020 ஆம் ஆண்டு முதல் அணியின் பெயரை பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றிக்கொண்டனர். இந்த இதுவரை வெற்றி பெறவில்லை என்றாலும், தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. இந்த ஆண்டு ஷிகர் தவான் அணிக்கு கேப்டனாக இருந்தார், அடுத்த ஆண்டு மீண்டும் அவரே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்டேடியம்: மொஹாலி & தர்மஷாலா

ராஜஸ்தான் ராயல்ஸ்

மறைந்த ஷேன் வார்னின் தலைமையில் 2008 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல் 2022 இல் இறுதிப் போட்டியாளராக இருந்தும் அவர்கள் வெற்றி பெறவில்லை. தற்போது சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு அணிக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளார். எனவே, சஞ்சு சாம்சனின் தலைமையின் கீழ், ராஜஸ்தான் ராயல்ஸ் 2024 இல் IPL ஐ வெல்லலாம்.

ஸ்டேடியம்: சவாய் மதோசிங் ஸ்டேடியம் மற்றும் அஸ்ஸாம் கிரிக்கெட் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் என்று அழைக்கப்பட்டது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணிகளில் இவர்களும் உள்ளனர். இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 2020ல் நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இறுதிப் போட்டி வரை வந்தது.  இந்த ஆண்டு, ரிஷப் பந்த் காயமடைந்ததால், அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் இருந்து வந்தார். இருப்பினும் ஐபிஎல் 2024 இல் ரிஷப் பந்த் மீண்டும் அணியை வழிநடத்தலாம்.

ஸ்டேடியம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2022 ஆம் ஆண்டு அறிமுகமான மற்றொரு புதிய அணியாகும். 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடரிலும் வியக்கத்தக்க வகையில் விளையாடி பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றது. கேஎல். ராகுல் 2022 மற்றும் 2023 இன் பாதியில் அணிக்கு தலைமை தாங்கினார். அதன்பிறகு, க்ருணால் பாண்டியா எஞ்சிய போட்டிகளுக்கு அணியின் தலைவராக இருந்து வந்தார். எனவே, 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் அணிக்கு கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஸ்டேடியம்:  ஏகானா ஸ்டேடியம், லக்னோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்