Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

ஐபிஎல் ஓய்வை அறிவித்த பிரபல சிஎஸ்கே வீரர்.. அப்ப இது தான் கடைசி போட்டியா.? | Ambati Rayudu Retirement in IPL 2023

Gowthami Subramani Updated:
ஐபிஎல் ஓய்வை அறிவித்த பிரபல சிஎஸ்கே வீரர்.. அப்ப இது தான் கடைசி போட்டியா.? | Ambati Rayudu Retirement in IPL 2023Representative Image.

தற்போது, 2023 ஆம் ஆண்டின் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டியான ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, பல்வேறு அணிகளுடன் மோதி தனது கடை ஆட்டமாக குஜராத் அணியுடன் மோத உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஆனால், மழையின் காரணமாக, இந்தப் போட்டி இன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு, குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டி தனது கடைசி ஆட்டமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல், CSK-ன் ஒரு பகுதியாக விளங்கும் ராயுடு, இரண்டு பட்டங்களை வென்றார்.

இவர், மும்பை இந்தியன்ஸூடன் 2010-ல் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் படி, இரு சிறந்த அணிகளாக மும்பை மற்றும் சென்னை அணிகளில் விளையாடினார். இவர் 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப் சுற்றுகள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள் என போட்டிகளில் கலந்து வென்றுள்ளார். இவர், ஐபிஎல்-ல் தனது இறுதிப்போட்டி இன்றிரவு நடக்கும் குஜராத் உடன் மோதும் போட்டி என முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது முதல் வெற்றி 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் உடன் வென்றதாகும். பேட்டராக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். அடுத்த ஆண்டே, இவர் சிஎஸ்கே-விற்கு மாறுவதற்கு முன்பு, 2015 & 2017 ஆம் ஆண்டுகளில் மேலும், இரண்டு பட்டங்களை வென்றார். அது மட்டுமல்லாமல், எம்எஸ் தோனியின் பக்கத்தில் தான் ராயுடு என்ற பவர் – ஹிட்டர் இவருக்கு உண்டு. ராயுடு 16 போட்டிகளில் 602 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவர் 16 போட்டிகளில் 151.17 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த பிறகு, 2021 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்றார்.

முந்தைய ஆண்டு சிஎஸ்கே அணிக்கும், ராயுடுவிற்கும் மறக்க முடியாத ஆண்டே எனக் கூறலாம். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடித் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்களில் இவரும் ஒருவர். லீக் போட்டியில், 4239 ரன்களை ராயுடு குவித்துள்ளார். மேலும், லீக்கில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 12 ஆவது இடத்தில் உள்ளவர் ராயுடு ஆவார். இவரது ஓய்வு அறிவிப்பால், ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்