Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விராட் கோலி என்ற புலி புளியோதரை மட்டுமே சாப்பிடும் என்று எதிர்பார்க்கவில்லை.. ரவி சாஸ்திரி

Iravaadhan Updated:
விராட் கோலி என்ற புலி புளியோதரை மட்டுமே சாப்பிடும் என்று எதிர்பார்க்கவில்லை.. ரவி சாஸ்திரிRepresentative Image.

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அசைவம் தவிர்த்து சைவம் உணவுகளை மட்டுமே உண்டு வருவது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டின் கிங் என்று போற்றப்படும் விராட் கோலி, 2012ஆம் ஆண்டுக்கு பின் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டினார். அதற்கு அவரின் உடற்தகுதியும், கட்டுமஸ்தான அவரது உடலுமே காரணம். உடல்தகுதியில் விராட் கோலி கொண்டு வந்த மாற்றம், ஏனைய இந்திய வீரர்களுக்கும் தொற்றிக் கொண்டது என்றே சொல்லலாம்.

ஆனால் அதற்காக விராட் கோலி 2012ஆம் ஆண்டு முதல் அசைவ உணவுகளை தவிர்த்து வந்திருக்கிறார் என்பதை பலமுறை தெரிவித்துள்ளார். உணவு கட்டுப்பாட்டில் தீவிரம் காட்டும் விராட் கோலி, ஒருநாள் கூட உடற்பயிற்சியையும் மிஸ் செய்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுவே களத்தில் உற்சாகத்துடனும், உறுதியுடனும் இருப்பதற்கு காரணம் என்று விராட் கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் விராட் கோலி சைவம் மட்டுமே சாப்பிடுவார் என்பது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர்  ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் புலியை போல் விராட் கோலி செயல்பட்டு வருகிறார். ஆனால் அந்த புலி வேட்டையாடாமல் புல் மட்டும் சாப்பிடுவது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

விளையாட்டு வீரர்களுக்கான உடற்தகுதியில் விராட் கோலி ஒரு பெஞ்ச் மார்க்கை செட் செய்துவிட்டார். களத்தில் விராட் கோலி மன உறுதி அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அதனால் கோலி அசைய பிரியராக இருப்பார் என்று நினைத்தேன். உடல்நலத்தை கருத்தில் கொண்டு உணவு பழக்கத்தை மாற்றியுள்ளது ஆச்சரியமாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்