Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தோனி அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

UDHAYA KUMAR September 25, 2022 & 11:39 [IST]
தோனி அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!Representative Image.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி இன்று மதியம் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிடவிருப்பதாக நேற்று அறிவித்திருந்தார். அது அவரது ஓய்வு குறித்த அறிவிப்பாக இருக்குமோ என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்திய அணியின் கேப்டனாக, டி20, 50 ஓவர் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த தோனி,  கடந்த 2020ஆம் ஆண்டு  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார்.  அதன்பிறகு  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார்.  கடந்த  2021ஆம் ஆண்டும் சிஎஸ்கேவை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தார் தோனி. இதன்பிறகு அவர் ஓய்வை அறிவித்துவிடுவார் என ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனால் இன்ப அதிர்ச்சியாக மீண்டும் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. 

தோனி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டாலும், அணியின் எதிர்கால நலன் கருதி, கடந்த சீசனின்போது ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தார். இருந்தபோதும், ஜடேஜாவால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. இதனால், மீண்டும் தோனியிடமே கேப்டன் பதவி வந்து சேர்ந்தது.  அப்போது கேப்டனாகி தோனி சில வெற்றியைப் பெற்றுக்கொடுத்தாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை சிஎஸ்கே அணி. 

இந்நிலையில்,  ஐபிஎல் 16ஆவது சீசன் இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களுக்கு பிறகு இந்தியாவில் போட்டி நடைபெறவுள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  தோனியும் இந்தாண்டில் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் தனது திறமையைக் காட்டிவிட்டு ஓய்வினை அறிவிப்பார் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில்தான், தோனி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  ‘‘ஒரு உற்சாகமான செய்தியை நாளை மதியம் 2 மணிக்கு உங்களிடம் பகிர உள்ளேன்..சந்திப்போம்’’ எனத் தெரிவித்தார். 

ஓய்வை அறிவிக்கப்போகிறாரோ என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் உற்சாகமான செய்தி என்று கூறியுள்ளதால், ஓய்வு அறிவிப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்