Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பலே.. பலே.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் களத்தில் இறங்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Gowthami Subramani September 13, 2022 & 15:40 [IST]
பலே.. பலே.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் களத்தில் இறங்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!Representative Image.

டி20 உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில், இந்திய அணியில் விளையாடும் புதிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல, உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் புதிய வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நடப்பு ஆண்டிற்கான சாம்பியன் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்க தேசம் போன்ற 8 நாடுகள் நேரடியாக விளையாடும்.

அதன் படி, இந்த டி20 தொடரில் சேரக் கூடிய 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி, இந்திய அணி வீரர்களின் பட்டியல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

 

இந்த புதிதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரோஹித் சர்மா (கேப்டன்)

கே.எல்.ராகுல் (துணை கேப்டன்)

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

தீபக் ஹூடா

ரிசப் பந்த் (விக்கெட் கீப்பர்)

தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்)

ஹர்திக் பாண்ட்யா

ரவிச்சந்திரன் அஷ்வின் (தமிழக வீரர்)

சாஹல்

அக்சர் படேல்

ஜஸ்பிரித் பும்ரா (நட்சத்திர பந்து வீச்சாளர்)

புவனேஸ்வர் குமார்

ஹர்ஷல் படேல்

அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு வீரர்கள்:

முகமது ஷமி

ஷ்ரேயாஸ் ஐயர்

ரவி பிஷ்னோய்

தீபக் சாஹர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்