Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னது இவர்கள் இல்லாமல் டி20'யா.. அப்போ இந்தியா நிலைமை?

Sekar August 12, 2022 & 13:34 [IST]
என்னது இவர்கள் இல்லாமல் டி20'யா.. அப்போ இந்தியா நிலைமை?Representative Image.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி அணியின் திறமையை மெருகேற்றி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில நாட்களுக்கு முன்பு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது, இதில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் திரும்ப அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 27, 2022 அன்று தொடங்கும் ஆசிய போட்டியில், இந்தியாவின் முதல் போட்டி பாகிஸ்தானுடன் ஆகஸ்ட் 28, 2022 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

டி20 வடிவத்தில் விளையாடப்படும் ஆசிய கோப்பை தொடங்குவதற்கு சற்று முன்பு, இந்திய அணி ஒரு பெரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பலத்த காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

துரதிர்ஷ்டவசமாக, டி20 வடிவத்தில் இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலும் காயம் காரணமாக இந்த போட்டியை இழக்கிறார். பும்ரா மற்றும் படேல் தவிர, ஷமி அணியில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவர் தற்போது டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படுகிறார்.

உலகக் கோப்பை வேகமாக நெருங்கி வருகிறது, இன்றுடன் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. உலகம் முழுவதும் உள்ள அணிகள் அதற்கான ஆயத்தத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையை தவற விட்டுள்ள நிலையில், உலகக்கோப்பையில் பங்குபெறுவதும் சந்தேகம் தான் என பும்ராவின் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

ஜஸ்பிரித் பும்ராவின் காயம் மேலும் மோசமாகியுள்ளது. இதனால் அவர் மிக முக்கியமான உலகக் கோப்பையை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. பும்ரா தனது முழு உடற்தகுதியை மீட்டெடுப்பது உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு சாத்தியம் குறைவு தான். தற்போதைய நிலவரப்படி, பும்ரா சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். அவர் இதை தவறவிட்டால், இந்தியாவுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும்.

இதை இந்திய கிரிக்கெட் அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்