Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chess Olympiad 2022 Teaser: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட டீசர்.. சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 10:45 [IST]
Chess Olympiad 2022 Teaser: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட டீசர்.. சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்Representative Image.

Chess Olympiad 2022 Teaser:  சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சதுரங்க போட்டிகளில் செச் ஒலிம்பியாட் என்ற போட்டி மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியானது சதுரங்க வீர, வீராங்கனைகளுக்கு ஒரு ஒலிம்பிக் திருவிழா போன்று இருந்து வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறவிருந்தது. ஆனால், போர் காரணமாக இந்த போட்டி இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. இப்பிரமாண்ட போட்டிகளை தொகுத்து வழங்கும் உரிமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

அதன்படி, சென்னை மாமல்லபுரத்தில் 44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இப்போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

வராலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறவிருப்பதால், இந்த போட்டியின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த நேற்று இரவு 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “வெல்கம் டூ சென்னை” என்ற வரிகளால் இந்த டீசர் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளை நிற சூட்டில் வீரர்களை வரவேற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போட்டிக்கான நாள் நெருங்கியதை தொடர்ந்து இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Tags:

chess olympiad 2022 venue | chennai chess olympiad 2022 | chess olympiad 2022 chennai location | chess olympiad 2022 teaser | chess olympiad india | chess olympiad 2022 dates | 44th chess olympiad 2022 | 44th chess olympiad 2022 teaser


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்