Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாரம்பரிய ஆஷஸ் கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்..!!

Saraswathi Updated:
பாரம்பரிய ஆஷஸ் கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்..!!Representative Image.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷல் தொடர் கிரிக்கெட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா அணி  பேட் கம்மின்ஸ் தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, இரு நாடுகளிடையே இரண்டாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பாரம்பரிய ஆஷஸ் தொடர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி பங்கேற்கிறது. 5 போட்டிகள் கொண்டது இந்த ஆஷஸ் தொடர்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே குறைந்தபட்சம் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆஷஸ் தொடரை இதுவரை ஆஸ்திரேலியா 34 முறையும்,  இங்கிலாந்து 32 முறையும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர்கள் வெற்றி தோல்வியின்றி  'டிரா'வில் முடிந்துள்ளன.

கடந்த 2021-22-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடந்த போட்டியில் சொந்த மண்ணில் 4-0 என்ற கணக்கில் அந்நாட்டு அணி வென்றது. ஆனால், 2001ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா இதுவரை வெற்றி பெற்றதில்லை.

அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பர்மிங்காம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இதுவரை 15 போட்டியில் விளையாடிய வகையில், ஆஸ்திரேலிய அணி  4வெற்றி,  6 தோல்வி மற்றும் 5 டிராவை சந்தித்துள்ளது.

உள்ளூரில் விளையாடுவது  இங்கிலாந்துக்கு இன்னொரு சாதகமான அம்சம் என்றே கூறலாம்.  கடந்த முறை ஆஸ்திரேலியாவில் 0-4 என்ற கணக்கில் கோப்பையை தவறவிட்டதற்கு இங்கிலாந்து தற்போது பழிதீர்க்க ஆயத்தமாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே  பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரிசம பலத்துடன் இருப்பதால், இந்தத் தொடரை யார் வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்