Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.1.3 கோடி நிதி பெற்ற ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம்.!

Gowthami Subramani Updated:
ரூ.1.3 கோடி நிதி பெற்ற ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம்.!Representative Image.

ஐஐடி மெட்ராஸ்-இன்குபேட்டட் எட்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான மெல்வனோ, தனது திறனை மேம்படுத்த 1.3 கோடி புதிய நிதியை திரட்டியுள்ளது.
 

ரூ.1.3 கோடி நிதி பெற்ற ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம்.!Representative Image

மெல்வனோ ஆப்

ஐஐடி மெட்ராஸ்-இன்குபேட்டட் எட்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான மெல்வனோ, தனது திறனை மேம்படுத்த 1.3 கோடி புதிய நிதியை திரட்டியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, தரண் சிங் மற்றும் சச்சின் சனோதியா போன்றோரால் மெல்வனோ ஆப் நிறுவப்பட்டது. இந்த ஆப் ஆனது மாணவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், IIT-JEE மற்றும் NEET தேர்வர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட பாடநெறிகளை வழங்குகிறது. இது சற்று வித்தியாசமான ஆப் ஆக விளங்குகிறது. இது குறித்து காண்போம்.

ரூ.1.3 கோடி நிதி பெற்ற ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம்.!Representative Image

வெகுமதி வழங்கும் மெல்வனோ ஆப்

ஸ்டார்ட் அப் செயலியான மெல்வனோ ஆப் மாணவர்களுக்கு வெகுமதி வழங்கக் கூடியவையாக அமைகிறது. இதில், மாணவர்கள் இந்த ஆப்-ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு சேப்டரை முடிக்கும் போது அல்லது டெஸ்ட் எழுதும் போது அதற்குத் தகுந்தாற் போல காயின்ஸ் பெறுவர். இந்த காயின்ஸ் மூலம், ஐஐடி அலும்னியில் இருந்து மெல்வானோவின் பிரீமியம் சேவைகளைப் பெறலாம்.
 

ரூ.1.3 கோடி நிதி பெற்ற ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம்.!Representative Image

சேவைகளை வழங்கும் ஆப்

இது குறித்து தரண் சிங் கூறியதாவது, "இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பல பட்டதாரிகள், வேலை கிடைக்காமல் தவிப்பதைப் பார்க்கிறோம். கல்லூரிகளில் கற்பிக்கப்படும் திறன்களுக்கும், தற்போதைய தொழில்களுக்குத் தேவையான திறன்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இது சிறந்த தொழில் வல்லுநர்களைக் கூட பாதிக்கும் நிலை ஏற்படலாம். இதனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான மேம்பாட்டுத் தளங்களில் நிபுணர்களுக்கு சேவை செய்கின்றன" என கூறினார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்