Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான விதைநிதி.! எப்படி பெறுவது? முழு விவரங்களும் இங்கே..

Gowthami Subramani Updated:
உங்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான விதைநிதி.! எப்படி பெறுவது? முழு விவரங்களும் இங்கே..Representative Image.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ஸ்டார்ட் அப் விதை நிதி வழங்குவதற்கான ஐந்தாவது பதிப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆரம்ப கட்ட ஸ்டார்ட் அப்கள், தங்களது தொழில் மேம்பாட்டிற்கு விதை நிதியைப் பெறலாம். இது குறித்த தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் TANSEED-ன் கீழ் விதைநிதி வழங்குகிறது. இதன் மூலம், ஸ்டார்ட் அப்கள் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்கான வழி வகைகளைப் பெறலாம். அதன் படி, கிராமப்புற தாக்கம் (Rural Impact), பசுமை தொழில்நுட்பம் (Green Tech) மற்றும் பெண்கள் தலைமையிலான தொடக்கங்கள் ((26.12.2022 தேதியிட்ட ஜி.ஓ. 87 MSME (A) துறையின்படி) போன்றவற்றிற்கு ரூ.15 லட்சம் விதை நிதியாக வழங்கப்படுகிறது. மேலும், மற்ற ஸ்டார்ட் அப்களுக்கு ரூ.10 லட்சம் விதை நிதியாக வழங்கப்படும். 
 

உங்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான விதைநிதி.! எப்படி பெறுவது? முழு விவரங்களும் இங்கே..Representative Image

விதைநிதி பெற தேவையான தகுதி

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விதைநிதி பெறுவதற்குத் தேவையான தகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

✤ குறைந்தபட்ச ஐடியாவின் கருத்துக்களைக் கொண்ட ஆதாரம் (Poc - Proof of Concept) அல்லது குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு (MVP - Minimum Viable Product) பெற்றிருக்க வேண்டும்.

✤ ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாட்டில் பதிவு செய்த இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

✤ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணியிடம் மற்றும் தலைமையகம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.

✤ நிறுவனங்களின் சட்டம் 2013-ன் கீழ், பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

✤ வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக தாக்கம் அல்லது அதிக திறன் கொண்ட தயாரிப்புகள் அல்லது செயல்முறைகளின் கண்டுபிடிப்பு, வணிகமயமாக்கல் அல்லது மேம்பாடு போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

✤ முக்கிய தயாரிப்பு அல்லது சேவையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அல்லது வணிக கண்டுபிடிப்பு மாதிரி அல்லது இலக்காகக் கொண்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு புதுமையான வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

✤ அதே போல, விண்ணப்பிக்க உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமானது ஏற்கனவே இருந்த வணிகத்தியப் பிரிப்பதன் மூலமோ, மறுகட்டமைப்பு செய்வது அல்லது மற்றொரு நிறுவனத்தின் துணை / கூட்டு முயற்சியாக / அசோசியேட்டாகவோ இருக்கக் கூடாது.

✤ இந்தியாவில் உள்ள எந்த அரசு நிறுவனத்தாலும் தவறிழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்படாத நிறுவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பு

இந்த விதைநிதி ஆதரவு, MNC கள் / வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய துணை நிறுவனங்களுக்கு இல்லை. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய குடிமகன்களாகக் கருதப்படும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் (OCI), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO) போன்றோர்களுக்கு உதவுவதாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்