Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup Story

Gowthami Subramani Updated:
சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image.

தொழில் முனைவோர்கள் அவர்களது வணிகத்தை மேம்படுத்திட பல்வேறு கடினமாக சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதும் அமையும். இருப்பினும் சிறப்பாக செயல்பட்டு வரும் சில நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதன் படி, சிறு நிறுவனங்களுக்கு உதவக் கூடிய வகையில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனமான Gallabox செயல்பட்டு வருகிறது.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

மூன்று நண்பர்களின் தொழில் சகாப்தம்

சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனமான Gallabox நிறுவனம், யோகேஷ் நாராயணன், கார்த்திக் ஜெகன்னாதன், யதிந்தர் பஞ்சநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மூன்று தொடு புள்ளிகளைக் கொண்டுள்ளது. அவை, வாடிக்கையாளர்களுக்கான கண்டுபிடிப்பு, ஆதரவு மற்றும் Purchase. மற்ற நிறுவனங்களின் வணிகத்தை எளிதாக்கக் கூடிய இந்த சிறந்த நிறுவனத்தின் வெற்றிக் கதையைப் பற்றி இதில் காணலாம்.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

கல்லாபாக்ஸ் நிறுவனத்தின் விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்: கல்லாபாக்ஸ்

நிறுவப்பட்ட ஆண்டு: 2020

நிறுவனத்தின் தலைமையகம்: சென்னை, தமிழ்நாடு

தொழில்: SaaS

இணையதளம்: gallabox.com

LinkedIn Id: Gallabox

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

கல்லாபாக்ஸ் நிறுவனத்தின் வரலாறு

கல்லாபாக்ஸ் நிறுவனமானது, கார்த்திக் ஜெகந்தாதன், யோகேஷ் நாராயணன், யதிந்தர் பஞ்சநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் உருவாக்கிய நிறுவனம் ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவர்கள், கல்லாபாக்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி, பிற நிறுவனங்களின் வணிக மேம்பாட்டிற்கு உதவி வருகின்றனர்.

இவர்கள் மூவரும் சுலேகா என்ற சிறு நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த போது எதிர்கொண்ட சிக்கல்கள், இவர்கள் சவால்களாக அமைந்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற திட்டம் இவர்களுக்குள் இருந்துள்ளது.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

வாட்ஸ் அப் பிஸினஸ் ஏபிஐ

இந்த நிறுவனமானது, இ-மெயில் கம்யூனிகேஷன், போன் தொடர்பு, எஸ்.எம்.எஸ் தொடர்பு ஆகியவற்றின் செயல்பாடுகளைப் படிப்படியாகக் குறைந்து கொண்டு வாட்ஸ்-அப் பயன்பாட்டை அதிகரித்தது. வாட்ஸ் அப் பயன்பாடானது சர்வதேச அளவில் செயல்படுத்தும் செயலியாக மாறிவிட்டது. இதனால், வாட்ஸ் அப் பிஸினஸ் ஏபிஐ அறிமுகம் செய்தது. இதன் மூலம், சிறு நிறுவனங்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவும் நோக்கத்தைக் கொண்டது.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

கல்லாபாக்ஸ் செயல்படும் முறை

கல்லாபாக்ஸ் நிறுவனம் உருவாக்கிய வாட்ஸ் அப் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, நிறுவனங்களில் பல்வேறு பணியாளர்கள் இருப்பதால், அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாட்ஸ் அப் எண்ணைப் பயன்படுத்துவார்கள். அதே சமயம், பணியாளர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு, எப்போது வேண்டுமென்றாலும் வெளியே செல்லுவர். அதே போல, புதிய பணியாளர்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்வர். இதனால், நிறுவனத்தில் என்ன நடக்கிறது என நிர்வாகத்துக்குத் தெரியாது. இதன் காரணமாக பல்வேறு தவறுகள் நடக்கின்றன.

இதனால், ஒரு நிறுவனத்துக்கு ஒரு வாட்ஸ் அப் எண், அதில் எத்தனை பரிவர்த்தனைகள் நடந்தாலும் ஒரே இடத்தில் நிர்வாகம் பார்த்துக் கொள்வது போல, சாஃப்ட்வேர் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன் படி, தற்போதைய நிலை என்ன? பயனர்கள் வாடிக்கையாளர்களாக மாறியது, பரிவர்த்தனையில் நடக்கும் தவறுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ள முடியும்.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

சரியான வாய்ப்பு

இதில் என்ன செய்வது என்று தெளிவான பிறகு, வேலையை விட முடிவெடுக்க நேரமும் வந்தது. அதே சமயத்தில் கோவிட் உம் வந்தது. இதனால், பலரும் இது போன்ற சூழ்நிலையில் வேலையை விட வேண்டாம் என ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால், இது தான் சரியான வாய்ப்பு என்றும், இந்த சூழ்நிலையிலேயே பிரச்சனையின் தீவிரம் புரியும் எனவும் கூறியுள்ளனர். அதன் பின், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் “Gallabox” நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

கல்லாபாக்ஸ் பிசினஸ்

அதே சமயம், கல்லாபாக்ஸ் நிறுவனமானது தீர்வு அல்லது ஆலோசனை நிறுவனமாக மட்டுமல்லாமல், Product நிறுவனமாக இருக்க வேண்டும் என திட்டம் வகுத்து திட்டத்திற்கு ஏற்றாற் போல, ப்ராடக்டையும் கண்டறிந்து விட்டனர். பிறகு, பல சிறு நிறுவனங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசி, அவர்களின் பிரச்சனையை தீவிரமாக புரிந்து, அதற்கு ஏற்றாற் போல ப்ராடக்டை உருவாக்கியுள்ளனர்.

இதில் கார்த்திக் ஜெகன்னாதன் அவர்கள் கூறியதாவது, “முதலில் இந்த ப்ராடக்டை நமக்கு தெரிந்தவர்களிடம் உபயோகப்படுத்தக் கூடாது என்பதில் முழுமையாக இருந்தோம். இதனால், சந்தையில் மார்கெட் செய்து, இயல்பாகவே வாடிக்கையாளர்களைப் பெறுவதைத் திட்டமாகக் கொண்டோம். அதன் படியே இயல்பாக வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள்

வழக்கமாக அமெரிக்காவில் இருந்து தான் SaaS நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஒரு சிலர் இந்தியாவில் ப்ராடக்டை உருவாக்கி அமெரிக்காவில் விற்பனை செய்வார்கள். இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை இருக்கும் போது, ஏன் அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டும் என நினைத்தனர்.

அதிலும், சர்வதேச அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் மிக அதிகம் ஆகும். அதாவது, நான்கில் ஒரு வாட்ஸ் அப் பயனர் இந்தியாவில் தான் இருப்பர். அதாவது, சர்வதேச அளவில் 200 கோடி நபர்களில் இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வாட்ஸ் அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் கல்லாபாக்ஸ் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். பெரிதளவில் மார்க்கெட்டிங் செய்யவில்லை எனினும், இயல்பாகவே, கல்லாபாக்ஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் வந்தனர்.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup StoryRepresentative Image

கல்லாபாக்ஸ் சாதனைகள்

மற்ற நிறுவனங்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட இந்த கல்லாபெட்டி நிறுவனத்தின் சாதனைகள் என்ன தெரியுமா?

✤ இந்த நிறுவனமானது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசிடம் இருந்து TANSEED மானியத்தைப் பெற்றுள்ளது.

✤ மேலும், டிசம்பர் 23, 2021 அன்று முதலமைச்சரிடமிருந்து ரூ.5 லட்சம் மானியமாகப் பெற்றனர். தமிழகத்தின் ஸ்டார்ட் அப் விதை மானிய நிதியின் போது மானியத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக கல்லாபாக்ஸ்-உம் ஆகும்.

✤ மேலும், நவம்பர் மாதத்தில் வெளிவந்த அறிக்கையின் படி கல்லாபாக்ஸ் நிறுவனம் 9 கோடிக்கும் அதிகமான நிதியை திரட்டுகிறது. எதிர்காலத்தில் ஒரு மில்லியன் டாலர் வருமானம் என்ற இலக்கை நோக்கிச் செல்கிறது.

இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களின் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும், சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தவும் கல்லாபாக்ஸ் நிறுவனம் தனது வருங்காலச் சேவையை சிறப்பாகச் செய்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்