Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... 

Nandhinipriya Ganeshan November 10, 2022 & 12:30 [IST]
Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, சென்னை ஐஐடியில் தனது கல்லூரி படிப்பை முடித்து, அதன் பின்னர் ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். நியூ ஜெர்சியில் உள்ள ஃபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 

முதல் ஸ்டார்ட்அப்

அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் டியோகோவில் உள்ள குவால்காம் நிறுவனத்தில் சேர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றினார். அந்த சமயத்தில் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்னை திரும்பி வந்து தனது சகோதரர்களுடன் இணைந்து 1996ஆம் ஆண்டு சென்னையில் 'வேம்பு சாஃப்ட்வேர்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, வணிக நிறுவனங்களை கையாள தேவைப்படும் சாப்ட்வேர்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image

வேம்பு சாஃப்ட்வேர் டூ ஜோஹோ கார்பரேஷன்

அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் புதுமையான இத்துறையில் அசுர வளர்ச்சியை கண்டது இவரது வேம்பு சாஃப்ட்வேர். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், மென்பொருள் சேவையிலும் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களும் இவருக்கு வாடிக்கையாளர்களாக மாறின. அதன்பின்னர், 2000 ஆம் ஆண்டிலேயே இந்நிறுவனம் மில்லியன் டாலர்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அளவுக்கு அசுர வளர்ச்சிக் கண்டது.  

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image

2005ஆம் ஆண்டில் இந்நிறுவனம் "அட்வென்ட்நெட்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் சர்வதேச அளவில் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்கள் பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்தன. அதை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட வேம்புவின் நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கத் தொடங்கியது. இது தான் தற்போது Zoho நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, 2009 ஆம் ஆண்டு அட்வென்நெட் நிறுவனம் 'ஜோஹோ கார்பரேஷன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image

ஜோஹோவின் அசுர வளர்ச்சி

2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பயனாளர்கள் 1.2 கோடியாக அதிகரித்தனர். மேலும், அந்த ஆண்டில் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டும் அளவிற்கு ஜோஹோ நிறுவனம் வளர்ச்சி கண்டது. ஜோஹோ நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஜப்பான், மேற்காசிய நாடுகள், இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்நிறுவனத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. சுமார் 10,000 பேருக்கு மேல் உலகம் முழுக்க ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். 

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டில் ஒரு சிறிய நிறுவனத்தை சர்வதேசத் தரத்துக்கு வளர்த்து, உலகின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு உயர்த்தியது ஸ்ரீதர் வேம்புவின் அயராத உழைப்பையும் தொழில் திறமையும் தான் என்றால் அது மிகையாகாது. 

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image

சிறந்த இந்தியருக்கான விருது 2022

சிஎன்என் நியூஸ் 18 ஆண்டு தோறும் பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கண்டறிந்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 2022ஆம் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்ற பிரிவில் சிறந்த இந்தியருக்கான விருது ஸ்ரீதர் வேம்புவிற்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்னர் இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது மற்றும் இந்தியாவின் சிறந்த தொழில்முனைவோர் போன்ற விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார்.

 

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ

ஸ்டார்ட்அப் தளத்தில் தனக்கென உலகளவில் முத்திரை பதித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, அதில் சாதித்து காட்டியதுடன் இந்திய இளைஞர்களை கிராமத்தில் இருந்த வெற்றிகரமாக திறமைகளை வெளிப்படுத்தி செயலாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அதாவது தற்போது உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இருக்கும் நிலையில், சென்னையை சேர்ந்த ஜோஹோ, வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் வெற்றிகரமான முதல் இந்தியா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 

தொழில்நுட்பத்துறையில் ஜாம்பவன்களாக விளங்கும் ஸ்ட்ரைப், ட்விட்டர், பேஸ்புக், லிஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho அடுத்த ஒரு வருடத்தில் 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.உலகம் முழுவதும் 80 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... Representative Image

பயனர்களுக்கு அதிவேக நெட்வொர்க்குகளை வழங்க அடுத்த 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் சுமார்100 நெட்வொர்க் PoPகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜோஹோ நிறுவனம் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பிளாக்செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் Zoho நிறுவனம் அறிவித்துள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்