Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Unicorns 2022 | 2022 -ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..

Nandhinipriya Ganeshan Updated:
Indian Unicorns 2022 | 2022 -ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..Representative Image.

தனியார் நபர்களால் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்டு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை எட்டும் நிறுவனங்களையே 'யூனிகார்ன் ஸ்டார்ட்அப்' என்று அழைக்கப்படும். அதாவது, ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பு $1 பில்லியனுக்கும் மேல் இருந்தால், யூனிகார்ன் கிளப்பில் நுழைவதற்கான வாய்ப்பை பெறுகின்றன. 

இந்தியா ஸ்டார்ட்அப் வெற்றிக் கதைகளின் பட்டியலில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், 90% ஸ்டார்ட்அப்கள் அவற்றின் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்து விடுகின்றன. 

Indian Unicorns 2022 | 2022 -ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..Representative Image

யூனிகார்ன் மழை:

ஒவ்வொரு தொழிலதிபரும் தங்கள் ஸ்டார்ட்அப்பை வெற்றியடையச் செய்ய 110% முயற்சி செய்கிறார்கள். இருந்தாலும் கூட, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே யூனிகார்ன் கிளப்பில் நுழைய வாய்ப்புக் கிடைக்கிறது. அனைத்து துறைகளிலும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கான முன்னோடியில்லாத நிதியுதவிக்கு மத்தியிலும் இந்தியாவில் யூனிகார்ன் மழை பெய்து வருகிறது. 

2021 ஆம் ஆண்டில் 42 யூனிகார்ன்களுக்கு பிறகு, 100 யூனிகார்ன்களின் மைல்கலை நெருங்க இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு சவாலான போட்டியாகவே இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் யூனிகார்ன்களின் எண்ணிக்கையை 42 லிருந்து 84 ஆக இரட்டிப்பாகியது.

Indian Unicorns 2022 | 2022 -ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..Representative Image

யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2022:

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 13 ஆக அதிகரித்து 99 யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களாக வளர்ச்சியடைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வரை 107 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளன. இதன் மூலம் இந்தியா 107 யூனிகார்ன் நிறுவனங்களின் தாயகமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுசூழல் மையங்களில் இந்தியா மூன்றாவதாக தன்னை நிலைத்திருக்கிறது. சரி வாங்க, 2022 ஆம் ஆண்டில் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற 21 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

2022ல் ஜனவரி மாதத்தில் 4 நிறுவனங்களும், பிப்ரவரியில் 5 நிறுவனங்களும், மார்ச் மாதத்தில் 4 நிறுவனங்களும் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தன. ஏப்ரல் மாதம் யூனிகார்ன் உருவாக்கத் தவறிய நிலையில், மே மாதம் 1 நிறுவனமும், ஜூன் மாதத்தில் 3 ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டியது. 

Indian Unicorns 2022 | 2022 -ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..Representative Image

2022 இல் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்திய ஸ்டார்ட்அப்கள்:

▶ ஃப்ராக்டல் [Fractal] - செயற்கை நுண்ணறிவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் - மும்பை

▶ லீட்  [LEAD] - கல்விக்கான தொழில்நுட்பம் தயாரிக்கும் நிறுவனம் - மும்பை

▶ டார்வின்பாக்ஸ் [Darwinbox] - மனித வள மேலாண்மைக்கான தொழில்நுட்ப நிறுவனம் - ஐதராபாத்

▶ டீல்ஷேர் [DealShare] - சமூகத்தின் சில்லறை வர்த்தகத்திற்கான ஸ்டார்ட் அப் நிறுவனம் - பெங்களூர்

▶ எலாஸ்டிக்ரன் [ElasticRun] - வர்த்தகங்களுக்கு இடையிலான இணைய வழியிலான வியாபாரம் - பூனே

▶ லைவ்ஸ்பேஸ் [Livspace] - வீட்டின் உள்புறம் வடிவமைப்பு மற்றும் புனரமைப்பு நிறுவனம் - பெங்களூர்

▶ எக்ஸ்பிரஸ் பீஸ் [Xpressbees] - சரக்குகள் போக்குவரத்துக்கான நிறுவனம் - பூனே

▶ யூனிபோர் [Uniphore] - மனிதர்களுடன் உரையாடும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தயாரிக்கும் நிறுவனம் - சென்னை 

▶ ஹசுரா [Hasura] - GraphQL மென்பொருள் டெவலெபர் 

▶ கிரெட்அவென்யூ [CredAvenue]  - நிதி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் - சென்னை

▶ அமகி [Amagi] - ஊடகங்களுக்காகன் தொழில்நுட்பத் தயாரிப்பு நிறுவனம் 

▶ ஆக்ஸிஸோ [Oxyzo] - நிதி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்

▶ கேம்ஸ்24x7 [Games24x7] - கேம்ஸ் விளையாடுவதற்கான தளம் - மும்பை

▶ ஓபென் [Open] - நியோபேங்கிங் என்றழைக்கப்படும் டிஜிட்டல் வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனம் - பெங்களூர்

▶ பிசிக்ஸ்வாலா [PhysicsWallah] - கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் - நொய்டா

▶ பர்பில் [Purplle] - அழகுசாதனப் பொருள்கள் விற்பனை நிறுவனம் - சென்னை 

▶ லீட்ஸ் ஸ்கொயர்டு [LeadSquared] - ஆட்டோமேஷன் தீர்வுகள், மார்க்கெட்டிங் மற்றும் end-to-end sales ஆகியவற்றை வழங்கும் SaaS ஸ்டார்ட்அப் நிறுவனம் - பெங்களூர்

▶ ஒன்கார்டு [OneCard] - விசா கிரெடிட் கார்டுகளை வழங்கும் ஃபின்கெட் ஸ்டார்ட்அப் நிறுவனம் - பூனே

▶ 5ஐயர் [5ire] - பிளாக்செயின் நெட்வொர்க் 

▶ ஷிப்ரோக்கெட் [Shiprocket] - மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் (3PL) சேவை வழங்கும் நிறுவனம் - டெல்லி

▶ டாடா 1எம்ஜி [Tata 1mg] - மருந்தகம் மற்றும் டெலிமெடிசின் ஸ்டார்ட்அப் - குருகிராம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்