Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!

Gowthami Subramani Updated:
கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!Representative Image.

இந்தியாவில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து சாதனை படைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!Representative Image

ஸ்டார்ட் அப் இந்தியா

இந்தியாவில் தொழில்முனைவோரை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசால் கடந்த ஜனவரி 16, 2016 ஆம் நாள் முதல் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொழில்முனைவோர்களிடையே உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!Representative Image

பாமர மக்களின் ஸ்டார்ட் அப்

இவ்வாறு ஸ்டார்ட் அப்-ல் இணையும் நபர்கள் தொழிலில் முதலீடு செய்வது என்பது சற்று கடினமாகத் தொடக்கமாக இருக்கும். சிலருக்கு, முதலீடுகள் கிடைக்காமல் அவர்களால் வணிகத்தை மேம்படுத்த முடியாத நிலையும் ஏற்படும். இந்த சூழலில், தமிழகத்தில் 13 மகளிர் சுய உதவிக் குழுக்கள், லோன் பெற்று அதன் மூலம் தொழில் தொடங்கி தற்போது தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.

கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!Representative Image

குடிசை தொழில்

திருநெல்வேலி மாவட்டத்தில் 4000-ற்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் உள்ள பெண்கள் வங்கிகளில் குழு கடன் பெற்று, ஒன்றிணைந்து சிறிய அளவிலான குடிசை தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. நவதானிய உணவுகள், ஆயத்த ஆடை தயாரிப்பு, பனை ஓலைகளாலான மிட்டாய் பெட்டிகள் உள்ளிட்ட தயாரிப்புகளை நெல்லையில் மட்டுமே மகளிர் சுய உதவிக் குழுவினர் விற்பனை செய்து வைத்தனர்.

கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!Representative Image

ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக பதிவு

மகளிர் சுய உதவிக் குழுவினரின் இந்த திறமையை ஊக்குவிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன் படி, இவர்களது தயாரிப்புப் பொருள்களின் விற்பனையை இணையதளம் வழியாக வெளி மாவட்டங்கள், மற்றூம் வெளி மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்காக, 13 குழுக்கள் அடையாளம் காணப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் படி, தமிழ்நாடு புத்தாக்கம் மற்றும் புத்துயிர் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட முயற்சி எடுத்து, 13 சுய உதவிக் குழுக்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக பதிவு செய்துள்ளது.

இது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், தமிழகத்தில் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் குறிப்பதாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்