Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

Recent Startup News: 424 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய பிரபல பெங்களூர் யூனிகார்ன் ஸ்டார்ட்அப்....!! 

Nandhinipriya Ganeshan May 18, 2022 & 23:48 [IST]
Recent Startup News: 424 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய பிரபல பெங்களூர் யூனிகார்ன் ஸ்டார்ட்அப்....!! Representative Image.

Vedantu Layoff: இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி அசுர வேகத்தைக் கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா 100 யூனிகார்ன்களின் தாயகமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், உலகிலேயே மூன்றாவது ஸ்டார்ட்அப் சூழல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையில், சில நாட்களாக பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுவருகிறது. இதனால், சில பிரிவில் மட்டும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் நிலைமை கடுமையாகியுள்ளது.

அந்த வகையில், மிகவும் பிரபலமான Edtech எனப்படும் கல்வி துறையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் மதிப்பீடு வித்தியாசம் இருக்கும் காரணத்தால் புதிய முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட பிரச்சனையில் தான் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பிரபல எட்டெக் யூனிகார்ன் வேதாந்து (edtech unicorn Vedantu) நிறுவனம் சிக்கியுள்ளது.

எட்டெக் யூனிகார்ன் வேதாந்து

கொரோனா லாக்டவுன் காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் ஆன்லைனில் படிக்க ஆரம்பித்தனர். இதனால், ஏராளமான ஆன்லைன் கல்வி சேவைகள் தொடங்கப்பட்டு நல்ல லாபம் ஈட்டி வந்தனர். அதில் ஒன்று தான் வேதாந்து, இது எட்டெக் பிரிவில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. லாக்டவுனில் லாபம் பார்த்து வந்த வேதாந்து தற்போது கட்டுபாடுகள் நீங்கி பள்ளி, கல்லூரிகள் செயல்பாட்டிற்கு வந்ததால், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

424 ஊழியர்கள் பணிநீக்கம்

இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத வேதாந்து நிறுவனம் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் 120 ஒப்பந்ததாரர்கள் மற்றும் 80 முழுநேர பணியாளர்கள் உட்பட 200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. அச்சம்பவம் நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியிலும், ஒட்டு மொத்த எட்டெக் துறை ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் மீண்டும் 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்து மீண்டும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 7% குறைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

வேதாந்து வம்சி கிருஷ்ணா

இந்த செயலின் மூலம் எங்களது 5900 ஊழியர்களில் 424 ஊழியர்களின் பிரிவு எங்களுக்கு ஒரு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாகவும், இதை ஏன் செய்தோம் என்று ஒவ்வொரு ஊழியர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு வலைப்பதிவில் வேதாந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அதோடு, இம்முடிவுக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அதாவது, "தற்போது சர்வதேச சூழல் மிகவும் மோசமாக உள்ளது. ஐரோப்பாவில் போர், வரவிருக்கும் மந்தநிலை அச்சங்கள் மற்றும் மத்திய வங்கி வட்டி உயர்வுகள் ஆகியவை பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுத்தது. உலகளவில் மற்றும் இந்தியாவிலும் பங்குகளில் பெரும் திருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் காலாண்டுகளுக்கு மூலதனம் பற்றாக்குறையாக இருக்கும்".

மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 5, 2022 வரை ஊழியர் மற்றும் அவருடைய குடும்பத்திற்கான சுகாதார நலன்கள் வழங்கப்படும் மற்றும் 2023 ஏப்ரல் 29 வரை பிராக்டோ மூலம் 15 மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் தள்ளுபடி பேத்தாலஜி & மருந்தக சேவைகளுக்கான அணுகல் வழங்கப்படும் எனவும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எட்டெக் துறையில் தொடரும் வீழ்ச்சி

இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் எட்டெக் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கங்களை கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், எட்டெக் நிறுவனமான அனாகாடமி (Unacademy) செலவைக் குறைக்கும் முயற்சியில் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதோபோல், மற்றொரு எட்டெக் நிறுவனமான லிடோ லேர்னிங் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து மூடும் நிலைக்கு வந்தது. சமீபத்தில், பைஜுவுக்குச் சொந்தமான WhiteHat Jr சுமார் 800 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது.

எட்டெக்ஸ் தவிர, சமூக வர்த்தக நிறுவனங்களான மீஷோ மற்றும் ட்ரெல், பர்னிச்சர் ரெண்டல் ஸ்டார்ட்அப் ஃபுர்லென்கோ மற்றும் புக் கீப்பிங் ஸ்டார்ட்அப் OkCredit ஆகியவையும் இந்த ஆண்டு தங்கள் ஊழியர்களின் குறிப்பிடத்தக்க பகுதியைக் குறைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்