Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivatech 2022: இந்த ஆண்டின் சிறந்த நாடு இந்தியா.. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மாநாட்டில் அங்கீகாரம்....!!!

Nandhinipriya Ganeshan June 17, 2022 & 16:15 [IST]
Vivatech 2022: இந்த ஆண்டின் சிறந்த நாடு இந்தியா.. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மாநாட்டில் அங்கீகாரம்....!!!Representative Image.

ஐரோப்பாவில் "Vivatech 2022" என்ற மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா "இந்த ஆண்டின் சிறந்த நாடு" (country of the year) என்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

அதாவது, இந்த அற்புதமான பயணத்தில் "இது இந்திய நாட்டிற்கு ஒரு பெரிய கௌரவம் என்றும், இந்த ஸ்டார்ட்அப் உலகிற்கு இந்தியர்களின் பங்களிப்பு முக்கியம் என்றும்" அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த அங்கீகாரம் இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அடையாளங்கள்

"ஒரு பில்லியன் ஸ்மார்ட்போன்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் அடையாளங்களை நீங்கள் ஒருங்கிணைத்தால், இந்த கலவையிலிருந்து வெளிவரும் தீர்வுகள் தனித்துவமானது. ஏனெனில், இந்த உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் அடையாளங்கள் உள்ளதாகவும், எங்கள் நாட்டிலுள்ள இளைஞர்களின் ஆற்றல் போல் உலகில் எங்கும் காண முடியாது என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுனார். 

டிஜிட்டல் தொழில்நுட்பம்

Vivatech 2022 தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியாவின் கிளையை தொடங்கி வைத்த அமைச்சர், இந்தியாவில் பில்லியன்கணக்கான வங்கி கணக்குகள், பில்லியன்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பில்லியனுக்கும் அதிகமான தொழில்நுட்ப அடையாளங்களையும் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தொழில்நுட்ப கண்காட்சி

மேலும், பேசிய அமைச்சர் இந்தியா அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்துவது உலகில் வேறு எந்த பகுதியிலும் இல்லை என்று கூறிய அவர், இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் பல அற்புதமான திட்டங்களை மேலும் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து சுமார் 65 ஸ்டார்ட்அப்கள் அரசின் ஆதரவுடன் பங்கேற்றுள்ளன. 

இந்தியாவிற்கு கிடைத்த கௌரவம்

இது குறித்து பேசிய அடல் இன்னோவேஷன் மிஷன் இயக்குநர் சிந்தன் வைஷ்ணவ், "இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவில் பல புதுமைகளை உருவாகி வருதாகவும், இதன் வளர்ச்சியால் இதுவரை இந்தியாவில் 100 யூனிகார்ன்கள் உருவாகி உள்ளதாகவும்" பெருமையுடன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இது இந்திய சுற்றுச்சுழல் அமைப்புகளின் அளவையும் அங்கீகாரத்தையும் பிரதிபலிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்