Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளிநாட்டு வேலையை உதறி தள்ளிவிட்டு, சொந்த தொழிலில் மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கேரள ஜோடி…!!

Nandhinipriya Ganeshan July 11, 2022 & 17:15 [IST]
வெளிநாட்டு வேலையை உதறி தள்ளிவிட்டு, சொந்த தொழிலில் மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கேரள ஜோடி…!!Representative Image.

இன்றைய காலத்தில் காலேஜ் முடித்தோமா, வேலைக்கு போனோமா என்று வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்போதெல்லாம் உள்நாட்டில் வேலை கிடைப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. இந்தநிலையில், வெளிநாட்டில் வேலை கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லுவோம். உண்மையை சொல்லப்போனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் ஏதாவது ஒரு வழியில் குடியேற வேண்டும் என்பது தான் பலரது கனவாகவே இருக்கிறது.

ஆனால், கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் அப்படிபட்ட வேலையையும் உதறிதள்ளி விட்டு, தங்களது முயற்சியால் முன் உதாரணமாகத் திகழ்ந்த கதையை தான் பார்க்கப் போகிறோம்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த தேவகுமார் நாராயணன் மற்றும் அவரது மனைவி சரண்யா இருவரும் 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்ல முடிவு செய்தனர். அங்கு சென்ற தேவகுமார் ஒரு பெரிய டெலிகாம் நிறுவனத்திலும், சரண்யா வாட்டர்புரூஃவ் நிறுவனத்திலும் இன்ஜினியராக சேர்ந்தனர். மெல்ல மெல்ல காலம் நகர்ந்தது. என்னதான் வெளிநாட்டில் வேலை செய்தாலும் தேவகுமாரின் கவனம் முழுவதும் தனது கிராமம் மற்றும் வீட்டின் மீது தான் இருந்துள்ளது.

அப்படியே நாலு ஆண்டுகள் கடக்க, வழக்கம்போல இவரின் வாழ்க்கையும் ரோபோ போலவே இருந்துள்ளது. அந்த சமயத்தில் தேவகுமாருக்கும் சரண்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு வருமானம்  முழுவதும் அவர்களின் சொந்த செலவுகளுக்கே சரியாக இருந்துள்ளது. இதனால் கடைசியாக வெளிநாடுகளில் இருந்து அவஸ்தை படுவதை விட நம்ம ஊருலேயே ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதை ஏதாவதை ஒன்றை பயன்படுத்தி சொந்த தொழில் ஆரம்பத்தி உயர்ந்துவிடலாம் என்று 2018 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் கிராமத்திற்கே திரும்பினார்கள்.

அப்படி சொந்த ஊருக்கு வந்து இருவரும் சேர்ந்து “பாப்லா” (papla startup) என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இங்கு பாக்கு மட்டையில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினர். தற்போது இந்தியாவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் இந்த புதிய முயற்சி வேற லெவலில் சூடுபிடித்துள்ளது.

இன்று இவர்களின் தயாரிப்புகள் இந்தியாவில் மட்டும் இல்லாமல், UAE மற்றும் USA போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அவர்களுடைய கிராமத்தின் ஏழு ஏழை பெண்களுக்கு வேலையும் அளித்துள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு வீடு திரும்பியதால், குடும்பத்தில் அதிருப்தி ஏற்பட, ஒருமுறை முயற்சிப்போம், தோல்வியுற்றால் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று பழையபடி வேலை செய்வோம் என்று கூறி குடும்பத்தினரை சமாதானம் செய்தனர். ஆனால், இவர்களுக்கு அங்கு செல்ல துளி கூட விருப்பம் இல்லை. எனவே, அவர்களது கிராமத்தில் பாக்கு சாகுபடி செய்வதை பார்த்து, அதன் மூலம் வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து நம்பிக்கையுடன் இறங்கியது தான் “பாப்லே”.

வெறும் 5 லட்சத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம. அந்த பணத்தை தனது செலவுகளை குறைக்க ஏஜென்சியிடம் கொடுக்காமல், மார்க்கெட்டிங் செய்யும் பொறுப்பைத் தன் தோளில் சுமந்தார் தேவகுமார். அதே துடிப்புடன் மிகக் குறுகிய காலத்திலே சோசியல் மீடியாவிலும் மிகச் சிறந்த இடத்தை பெற்றனர். அதன் பிறகு 10 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது இவர்கள் பாக்கு மட்டையில் இருந்து 18 வகையான வித்தியாசமான பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்த எவ்வித ரசாயனமில்ல பொருட்கள் மக்கும் தன்மையும், மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை மட்டுமே பயன்படுத்துவதுமே இவர்களின் தொழிலை இவர்களை மேலே உயர்த்த காரணம்.

அவர்களின் தயாரிப்புகளின் விலை 1 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும், அதில் 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்குவதாகவும் சரண்யா தெரிவித்துள்ளார். இதனால், கஸ்டமர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. எங்களது இந்த புதிய முயற்சிக்கு மக்களின் ஆதரவு உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த ஜோடி தெரிவித்தனர்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடுக்க இன்று உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பாக்கு மட்டையோடு, தென்னை மட்டைகள் மற்றும் வாழை மட்டைகளை வைத்தும் பல பொருட்களை தயாரிக்க அந்த ஜோடி திட்டமிட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்