Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ரூ. 15,000 க்கு கம்மியாக கிடைக்கும் 5g மொபைல்கள்...!

Manoj Krishnamoorthi Updated:
ரூ. 15,000 க்கு கம்மியாக கிடைக்கும் 5g மொபைல்கள்...!Representative Image.

டெலிகாம் உலகில் தற்போதைய தொழில்நுட்பான 5g சேவை இந்தியாவில் அறிமுகமானது. லேட்டஸ் தொழில்நுட்பான 5g 4ஜி சேவையை விட மிக வேகமாக செயல்படும் திறன் கோண்டது. இந்த 5ஜி சேவைக்கு ஏற்ற புதிய மொபைல்கள் புதிய மாடலில் வரிசையாக லான்ச் ஆகி கொண்டு இருக்கிறன. அதில் பட்ஜெட் விலையில் ரூ. 15,000 குறைவாக உள்ள  5g மொபைல் மாடல்களை பார்ப்போம். 

Budget 5g phones under 15000

Realme Narzo 30A

10,999 ரூபாய்க்கு கிடைக்கும் Realme Narzo 30A போன் 5ஜி சேவையில் செயல்பட கூடியது.  4GB RAM, 64 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் பாரக்ஸிமிட்டி சென்சார், ஆக்ஸ்லெரேஷன் சென்சார், லைட் சென்சார், மெக்னட்டிக் சென்சார் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளது. அதிக நேரம் சார்ஜ் நிற்கும் 6000 mAh பேட்டரி உள்ளது, இதனால் கேமிங் போனாகவும் செயல்படுகிறது. 

Oppo A54

Oppo நிறுவனத்தின் Oppo A54 மாடல் 5g சேவையில் செயல்படும் திறன் கொண்டது. 6.5 இன்ச் கொண்ட இந்த Oppo A54 பல நிறங்களில் விற்பனையாகிறது. 14,990 ரூபாய்க்கு விற்பனையாகும் Oppo A54 போனில் 4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டதாகும். ஆண்ட்ராய்டு v1Q OSஇல் செயல்படும் இந்த போன் 5000 mAh பேட்டரி கொண்டுள்ளது. 

Nokia X50

Nokia தயாரிப்பில் உருவாகியுள்ள X50 மொபைல் 6 GB RAM மற்றும் 128 GB ROM கொண்டது. Qualcomm Snapdragon 630 பாரஸ்ஸர் கொண்ட இந்த போன் 5000 mAh பேட்டரி கொண்டுள்ளது. 14,652 ரூபாய் என எதிர்பார்க்கப்படும் X50 யின் விலைக்கு IPS LCD டீஸ்பிளே தான் கொடுக்கப்பட்டுள்ளது. Nokia X50 போன் 16 MP பிரண்டு கேமரா மற்றும் 48 MP ரியர் கேமரா கொண்டது. 

Xiaomi Redmi Note 10 5g

Redmi Note 10 5g போன் Redmi யின் பிரபலமான Note சீரியஸில் தயாரிக்கப்பட்டது. 6.5 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு v11 இல் செயல்படும் Redmi Note 10 5g போன் 14,480 ரூபாய் ஆகும். 6GB RAM மற்றும் 64 GB ROM உள்ள Note 10 5g மொபைலில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

Vivo Y52 5G

கைக்கு அடக்கமாக லைட் வெயிட்டில் உருவாகிய Vivo Y52 5G போனின் விலை 14,590 ரூபாய் ஆகும். கிளியரான கேமரா குவாலிட்டி மற்றும் 5000 mAh நீண்ட நேர பேட்டரி பேக் அப் கொண்ட இந்த போன் 5ஜி சேவையில் செயல்படும். 128 GB ஸ்டோரேஜ்  மற்றும் MediaTek Dimensity 700 பாரஸ்ஸரில் உருவான இந்த போன் தற்போது வரை இந்தியாவில் லான்ச் செய்யவில்லை. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்