Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பட்ஜெட்டில் மிகப்பெரிய டிவி: infinix வேற லெவல்...!

Chandrasekar Updated:
பட்ஜெட்டில் மிகப்பெரிய டிவி: infinix வேற லெவல்...!Representative Image.

இந்தியாவில் 32 இன்ச் HD டிவி மற்றும் 43 இன்ச் 4K டிவி, இரண்டையும் கியூஎல்இடி (QLED) டிஸ்பிளேவுடன் infinix நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிவியானது, எச்டி (HD) சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 90% என்டிஎஸ்சி வைடு கலர் காமட் (NTSC Wide Colour Gamut) மற்றும் கேம் டாஸ்போர்ட் ஆப்டிமைசேஷன் (Game Dashboard Optimization) வருகிறது.

இன்பினிக்ஸ் 42 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிவியானது, 4K சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 94% என்டிஎஸ்சி வைடு கலர் காமட் மற்றும் கேம் டாஸ்போர்ட் ஆப்டிமைசேஷன் வருகிறது. குறிப்பாக, எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் உள்ளது.

இரண்டிலும் டிஸ்பிளேவை தவிர மற்ற அம்சங்கள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இரண்டு டிவிகளும் வெப்ஓஎஸ் (webOS) உடன் குவாட் கோர் (Quad-Core) சிப்செட் மற்றும் ஐஎம்சி பிஎக்ஸ்4 ஜிபியு ( IMG BXE4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளன. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) உள்ளிட்ட ஓடிடி (OTT) ஆப்கள் வருகின்றன. அதோடு யூடியூப் (YouTube), ஆப்பிள் ஏர் பிளே (Apple AirPlay) மற்றும் ஆப்பிள் ஹோம் (Apple Home) சப்போர்ட் உள்ளது.

4K மாடலில் மேஜிக் ரிமோட் கன்ட்ரோல் வசதி இருக்கிறது. அதாவது வாய்ஸ் மூலம் டிவியை கன்ட்ரோல் செய்யலாம். அதோடு டூயல் பேண்ட் வைபை, 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 1 ஆர்எஃப் இன்புட் (RF Input), 1 ஏவி இன்புட் (AV Input) மற்றும் 1 ஹெட்போன் ஜேக் வருகிறது. டால்பி ஆடியோ உடன் 20W ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த டிவிகளில் விலையை பொறுத்தவரையில், இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி மாடல் ரூ.10,999க்கும், இன்பினிக்ஸ் 43 இன்ச் 4K மாடல் ரூ.20,999க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்