Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் ரூ.999 க்கு 4ஜி மொபைல்.. இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Jio Bharat V2 4g Phone

Nandhinipriya Ganeshan Updated:
வெறும் ரூ.999 க்கு 4ஜி மொபைல்.. இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Jio Bharat V2 4g PhoneRepresentative Image.

மிகவும் குறுகிய காலத்தில் இண்டர்நெட் மற்றும் மொபைல் உலகில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்த ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தாறுமாறான ஆஃபர்களை கொண்டு வருவது வழக்கம். ஆனால், இந்த முறை நிறுவனம் ரீசார்ஜ் பேக் மூலம் இல்லாமல், புதிய மொபைலுடன் வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜியோ பாரத் வி1 என்ற 4ஜி தொழில்நுட்ப வசதிக் கொண்ட தனது பட்ஜெட் ஃபோனை இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.999 க்கு வாங்கிக் கொள்ளலாம். கீ பேட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஃபோன் வாடிக்கையாளர்களை அதிகம் இம்ப்ரஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2ஜி போன்கள் பயன்படுத்துபவர்கள், புதிய போன்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஃபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'ஜியோ பாரத் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபோன் ஒரு அடிப்படை ஃபீச்சர் ஃபோனாக இருந்தாலும் கூட இதில் இன்டர்நெட்டை இயக்க முடியும் என்பது இதன் சிறப்பு. இந்த ஃபோனுடன் ரிலையன்ஸ் நிறுவனம், வேறு இரண்டு புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ பாரத் ரூ.123 ரீசார்ஜ் ப்ளான்:

இந்த ஃபோனில் இது தான் பேசிக் ப்ளானும் கூட.  அதாவது, சாதாரணமாக மற்ற நிறுவனங்கள் மாதந்தோறும் பேசிக் ப்ளானுக்கு ரூ.179 வசூலிக்கின்றனர். பயனர்கள் ரீசார்ஜ் தேதியிலிருந்து 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும். ஆனால், இந்த ஜியோ பாரத்தில் பேசிக் ப்ளான் வெறும் ரூ.123 மட்டுமே. வரம்பற்ற இலவச கால் மற்றும் மொத்தம் 14 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மற்ற ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பயனர்கள் 30 சதவீதம் வரை சேமிக்க இந்த திட்டம் உதவுகிறது.

ஜியோ பாரத் ரூ.1234 ரீசார்ஜ் ப்ளான்:

இரண்டாவது ஜியோ பாரத் ப்ளான் ரூ.1234 விலையில் இருக்கும் வருடாந்திர திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் வருடம் முழுவதும் இலவச கால் மற்றும் மொத்தம் 168 ஜிபி டேட்டா (ஒரு நாளைக்கு 0.5 ஜிபி) வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.1799 தொகையை பெற்றுக் கொண்டு இலவச கால் மற்றும் 24 ஜிபி டேட்டா மட்டுமே வழங்குகின்றன. மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஜியோ 7 மடங்கு அதிக டேட்டாவை வழங்குகிறது, இதன் விளைவாக ஒரு நாளைக்கு டேட்டாவில் 25 சதவீதம் சேமிக்க முடியும்.

ஜியோ பாரத் ஃபோனின் சிறப்பம்சம்:

ஜியோவின் இந்த புதிய சாதனத்தின் எடை 71 கிராம் ஆக இருக்கும். 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஃபோனில் HD குரல் அழைப்பு, FM ரேடியோ, 128GB SD மெமரி கார்டு ஆதரவு போன்ற அம்சங்கள் உள்ளன. மொபைலில் 1.77 இன்ச் TFT திரை, 0.3MP கேமரா, 1000mAh பேட்டரி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், சக்திவாய்ந்த ஒலிபெருக்கி மற்றும் டார்ச் ஆகியவையும் உள்ளன. மேலும் கேமரா, JioPay (UPI மூலம் பரிவர்த்தனை), Jio Saavn, JioCinema மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்