Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Digital Marketing in You tube: இன்னும் நாளே வருடத்தில் இது தான் டாப்...இப்பவே கத்துக்கோங்க! அப்புறம் லட்சக்கணக்கில் லாபம் தான்!

Priyanka Hochumin June 24, 2022 & 12:30 [IST]
Digital Marketing in You tube: இன்னும் நாளே வருடத்தில் இது தான் டாப்...இப்பவே கத்துக்கோங்க! அப்புறம் லட்சக்கணக்கில் லாபம் தான்!Representative Image.

Digital Marketing in You tube: தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுள், எதிர்காலத்தில் அதிக வருவாய் ஈட்டும் ஒன்றாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் திகழ்கிறது. இதில் இருக்கும் யுத்திகளை கற்றுத்தேர்ந்து சகலகலா வல்லவனாக மாற உங்களுக்கு உதவும் ஒரு சில யூடியூப் சேனல்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

சுமார் 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர சந்தை $786.2 பில்லியன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் ஒவ்வொரு நாளும் சுமார் 5.6 பில்லியன் சர்ச்களைக் கையாள்வதாக கூறப்படுகிறது. மேலும் கணக்கெடுப்பின் படி, உலகளவில் ஒரு நாளைக்கு மக்கள் சுமார் 147 நிமிடங்கள் சோசியல் மீடியாவில் செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி அதிக லாபம் பெரும் சிறந்த வாய்ப்பாக கருதுங்கள்.

Best Online Digital Marketing Courses in India

நீங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளத்தில் பிகினராக இருந்தால் இந்த யூடியூப் சேனல்கள் உங்களுக்கு கைகொடுக்கும். ஆ முதல் ஃ வரை தெளிவாக கற்றுக்கொடுத்து, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் உங்களை கைதேர்ந்தவராக மாற்ற உதவும்.

நீல் படேல் | Neil Patel

அஹ்ரெஃப்ஸ் | Ahrefs

ஹப்ஸ்பாட் மார்க்கெட்டிங் | HubSpot Marketing

செம்ருஷ் | Semrush

அலெக்ஸ் கட்டோனி | Alex Cattoni

வனேசா லாவ் | Vanessa Lau

தங்களின் யூடியூப் சேனலில் என்னெல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதை விவரமாக பார்க்க தொடர்ந்து படியுங்கள்.


How to get more Subscribers in You Tube: யூடியூப்பில் அதிக Subscribers கொண்டு வர...இந்த 5 ஸ்டெப் போதும்! ட்ரை பண்ணுங்க!


Neil Patel

உங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரைத் தெரிந்திருந்தால் இவரைப் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவரின் யூடியூப் சேனலுக்கு 1.05 மில்லியன் Subscribers இருக்கிறது. இவரை செல்லமாக மார்க்கெட்டிங் குரு என்று அழைப்பார்கள். தன்னுடைய யூடியூப் சேனலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்படுத்தி எப்படி முன்னேறியுள்ளார் என்பதை மிகவும் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதனை பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் பிசினஸில் உபயோகித்து பலன் பெறுங்கள். மேலும் பிரபலமான கிவொர்ட் ரிசெர்ச் மற்றும் பேக்லிங்க் அனலைசிஸ் டூல் Ubersuggest உருவாக்க முக்கிய காரணமே இவர் தான்.

Ahrefs

இதுவும் ஒரு பிரபலமான யூடியூப் சேனல் தான். இதற்கு 325K Subscribers உள்ளது. அஹ்ரெஃப்ஸின் யூடியூப் சேனலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்பிக்கும் சாமுவேல் ஓ, ஒரு அனுபவமிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகர் ஆவார். அவரின் டேட்டா டிரைவன் மற்றும் மேம்பட்ட மார்க்கெட்டிங் உத்திகள் மற்றும் தனித்துவமான SEO/PPC யுக்திகள் மூலம் 0 முதல் 2 மில்லியன் மாதாந்திர பார்வையாளர்கள் வரை புதிய வலைத்தளங்களை எடுத்துள்ளார்.

ஆன்லைன் மார்க்கெட்டிங் வெளியீடான மனி ஜர்னலின் நிறுவனர் ஆவார். அது ஒரு ஆன்லைன் மார்க்கெட்டிங் பப்லிகேஷன், இதில் வெப்சைட் டிராபிக்கை அதிகரிக்க தேவைப்படும் மார்க்கெட்டிங் உத்திகளைப் பகிர்ந்துள்ளது. மேலும் இவர் கனடாவின் டொராண்டோவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியையும் நடத்தி வருகிறார்.

HubSpot Marketing

ஹப்ஸ்பாட் என்பது பிரபலமான CRM (வாடிக்கையாளர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட்) சாப்ட்வேர் ஆகும். இந்த சாப்ட்வேர் யாருக்கெல்லாம் பயன்படுகிறது என்றால், மார்க்கெட்டிங், சேல்ஸ், கன்டென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றிற்கு வணிகங்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த யூடியூப் சேனலில் SEO, B2B மார்க்கெட்டிங், சோசியல் மீடியா மார்க்கெட்டிங் மற்றும் ஈமெயில் மார்க்கெட்டிங் பற்றி தெளிவாக விளக்குகின்றனர். இந்த சேனலுக்கு மொத்தமாக 207K Subscribers உள்ளது.


How to Earn Money with You tube in India: நச்சுன்னு இப்படி ஒரு வீடியோ போட்டிங்கனா...யூடியூப்ல சும்மா காசு அள்ளலாம்!


Semrush

பல மார்க்கெட்டர்ஸ் பயன்படுத்தும் எஸ்சிஓ மற்றும் இணைப்பு பகுப்பாய்வு (link analysis) டூல்களில் இதுவும் ஒன்றாகும்.  இவர்கள் தனியாக ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி, அதில் SEO டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ், பேக்லிங்க்ஸ், PPC, யூடியூப் மேம்படுத்தல், கன்டென்ட் மார்க்கெட்டிங், போட்டியாளரின் ஆராய்ச்சி மற்றும் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் ஆகியவற்றை தெளிவாக கற்றுக்கொடுகின்றனர். இந்த சேனலுக்கு 111K Subscribers இருக்கிறார்கள்.

Alex Cattoni

இந்த சேனலுக்கு 195K Subscribers உள்ளது. இவர்களிடம் இருந்து மக்களை உணர்பூர்வமாக எப்படி ஈர்ப்பது என்பதை விரிவாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் ஆன்லைன் சேவையில் அனைத்து ஏற்பாடுகள் முடிந்த பிறகு இறுதியாக SEO வேலைகளை எப்படி கையாள்வது அதன் மூலம் அதிகபடியான சந்தாதாரர்களை பெறுவது ஆகியவற்றைப் பற்றி விலகாம்க கூறியிருப்பார். இதன் மூலம் உங்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்க அவர்களைக் கட்டாயப்படுத்தும் வகையில் அற்புதமான நகலை (Copy) நீங்கள் எழுத வேண்டும். 

Vanessa Lau

இவருக்கு மொத்தம் 569K Subscribers இருக்கிறார்கள். இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஒரு லேடி டான் என்றே குறிப்பிடலாம். ஐவரும் சோசியல் மீடியாவில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எளிதாக எப்படி பயன்படுத்துவது என்று கூறியுள்ளார்.

Digital marketing in youtube, online digital marketing courses in india, best online digital marketing courses in india

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்