Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Earn Money with You tube in India: நச்சுன்னு இப்படி ஒரு வீடியோ போட்டிங்கனா...யூடியூப்ல சும்மா காசு அள்ளலாம்!

Priyanka Hochumin June 22, 2022 & 17:15 [IST]
How to Earn Money with You tube in India: நச்சுன்னு இப்படி ஒரு வீடியோ போட்டிங்கனா...யூடியூப்ல சும்மா காசு அள்ளலாம்!Representative Image.

How to Earn Money with You tube in India: யூடியூப் பயன்படுத்தி லட்சம் லட்சமாக பணம் சம்பாதிப்பது எப்படி? என்று தெரிந்துகொள்ள இது உங்களுக்கு அறிய வாய்ப்பு.

மக்கள் அதிகமாக யூடியூப்பில் படம் பார்ப்பது, பாடல் கேட்பது, சமையல் குறிப்பு பார்ப்பது என்று தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால்  இந்த கொரோனா சமயத்தில் பல பேர் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். அந்த மாதிரியான சூழ்நிலையில் யூடியூப் தளம் தான் அவர்களுக்கு கைகொடுத்தது. அதிலும் ஒரு சிலருக்கு நல்லா போகும், ஒரு சிலருக்கு எதிர்பார்த்த அளவுக்கு சரியா போகாது. அந்த மாரியான பயனர்களுக்கு தெளிவு கிடைக்கவே இந்த பதிவு. முழுமையாக படித்து தெரிந்துகொண்டு அதிக பணம் சம்பாதியுங்கள்.

மொதல்ல சேனல் உருவாக்கனும்

நீங்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று உருவாக்க வேண்டும். இதுக்கு கட்டணம் எதுவும் செலுத்தணுமா? என்று பயப்பட வேண்டாம். ஒத்த பைசா செலவு பண்ண தேவையில்லை ஃபிரீயாவே சேனல் ஓபன் செய்யலாம். உங்களின் பர்சனல் மெயில் ஐடி போதும், அதனைக் கொண்டு முதலில் லாகின் செய்யவும். பின்பு உங்களின் ப்ரொபைல் பிக்சர் உடன் வட்ட வடிவில் ஒரு ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்து create your channel என்பதை செலக்ட் செய்யவும்.

அதனை செய்த உடன் நீங்கள் எந்த மாரியான கன்டென்ட் போட போகிறீர்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் உங்களின் சேனலுக்கு பெயர் வைக்க வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான ஸ்டெப்.

இதுக்கு அப்புறம் சிம்பிள் தான், உங்களுடைய மொபைல் நம்பரை உள்ளிடவும். உங்களுக்கு வரும் ஓடிபியை கொடுத்து, கீழே காட்டப்பட்டும் டெக்ஸ்ட் மெசேஜ் என்ற ஆப்ஷனை டிக் செய்யவும். இறுதியாக கிரியேட் எனபதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய சேனல் கிரியேட் ஆகிவிடும்.


Dell G15 5525 Review: கேமிங் இல் ப்ரோவாக இருப்பவர்களுக்கு ஏற்ற லேப்டாப்...மொத்தம் இந்து வேரியன்ட்களில்! இதுக்கு மேல என்ன வேணும்?


உங்க சேனலை பாப்புலர் ஆக்குவது எப்படி?

சேனல் கிரியேட் பண்றது பெரிய விஷயம் இல்ல, அத மக்கள் கிட்ட ரீச் ஆகா வைக்கிறது தான் கஷ்டம். உங்களுக்கெல்லாம் ஒரு சீக்ரெட் தெரியுமா? என்னைக்குமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் எந்த விஷயத்தையும் பண்ணாதீங்க. மொதெல்லா என்ன பன்றோமோ அதை சரியா பண்ணனும், அடுத்து புதுசா என்ன பண்ணப்போறோம் என்று யோசிங்க. அப்புறம் உங்களுக்கு வரவேண்டிய அனைத்தும் வந்து சேறும். யூடியூப்ல அதிக மக்களை பாக்க வைக்க என்ன செய்ய வேண்டும்னு தெரிஞ்சிக்கோங்க.

  • முதலில் நீங்க அப்லோட் செய்யப்போகும் வீடியோ மக்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
  • நீங்கள் அப்லோட் செய்யு வீடியோ கிரீன் மேட் போட்டு, 4கே தொழில்நுட்பத்துடன், பல்வேறு வகை எடிட் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் பதிவேற்றம் செய்யப்போகும் வீடியோவின் தரம் நன்றாக இருக்க வேண்டும்.
  • ட்ரெண்டிங் விஷயங்கள் இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை, ஆனால் ஒரே விஷயம் தொடர்பான பல்வேறு வீடியோக்களை அப்லோட் செய்து உங்கள் சேனலை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, சமையல் குறிப்பு, சினிமா ரிவ்யூ, சுற்றுலா தளங்கள், மர்ம கதைகள் என்று நிறைய இருக்கிறது, இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனை செயல் படுத்துங்கள்.

  • நீங்கள் அப்லோட் செய்யப்போகும் வீடியோவை சொந்தமாக உருவாக்கினால் மிகவும் சிறப்பான தரமான சம்பவமாக இருக்கும். ஏனெனில் மற்றவர்களின் வீடியோவில் இருந்து எடிட் செய்து பேக்-க்ரவுண்டில் சினிமா பாடல்களை இணைத்து அப்லோட் செய்வதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
  • மேலும் நீங்கள் அப்லோட் செய்யும் பொழுது யூடியூப் அறிவுறுத்தும் ஆடியோக்களை தவிர்த்துவிடுங்கள். ஏன்னா நீங்கள் அதனை பயன்படுத்தினால் அதில் இருந்து வரும் விளம்பர வருமானம் வரமால் போய்விடும்.
  • அதே போல் நீங்கள் எடுத்த வீடியோவை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவாக பார்த்து, தேவையில்லாத பகுதிகளை எடிட் செய்துவிடுங்கள். அதுக்கென்று சில சாஃப்ட்வேர் இருக்கிறது, அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • ஒரு சில வீடியோக்களுக்கு பின்னணியியல் ஆடியோ தேவையில்லாமல் இருக்கும். ஆனால் பேக்-க்ரவுண்டில் பாடல் அல்லது ஆடியோ ஏதேனும் இருக்க வேண்டும் என்றால் அதனை ரெக்கார்ட் செய்து வீடியோவுடன் இணைத்து அப்லோட் செய்யவும்.
  • இது தான் முக்கியமான ஸ்டெப். அப்லோட் செய்த வீடியோவைப் பற்றிய தரவுகளை தர வேண்டும். பார்த்த உடன் வீடியோவை மக்கள் தொட வேண்டும், அப்படியான ஒரு தலைப்பை கொடுக்க வேண்டும். பிறகு வீடியோக்கான Description மற்றும் Tags-களை கொடுக்கவும். இப்ப public என்று செலக்ட் செய்து save செய்யுங்கள். வெற்றிகரமாக வீடியோ உங்க சேனலில் அப்லோட் ஆகிவிட்டது. 

How to earn money with youtube in india, how to earn money from youtube in tamil,how to earn money in youtube channel

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்