Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Online Money Scams: போனுக்கு வந்த மெசேஜ்...யோசிக்காமல் கிளிக் செய்துவுடன்...NIL பேலன்ஸ்!

Priyanka Hochumin May 18, 2022 & 17:15 [IST]
Online Money Scams: போனுக்கு வந்த மெசேஜ்...யோசிக்காமல் கிளிக் செய்துவுடன்...NIL பேலன்ஸ்!Representative Image.

Online Money Scams: விஞ்ஞானிகள் தொழில்நுட்பங்களை மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக கண்டுபிடித்தனர். எப்படி நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கோமோ, அதே போல் தொழில்நுட்பங்களை தவறான வழியில் சிலர் அதை உபயோகிக்கின்றனர். அதற்கான உதாரணம் நிறையே சொல்லலாம், அதில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தெரியாமல் அழுத்தும் ஒரு நிமிடத்தில் ஒருவரின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை வைத்துகொண்டு ஹாக்கர்கள் மக்களின் பணத்தையும், அவர்களின் பர்சனல் வாழ்க்கையையும் மறைமுகமாக திருடுகின்றனர். எனவே, பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

நமக்கு வரும் மெசேஜ் அல்லது ஏதேனும் வெப்சைட்டைப் பயன்படுத்தும் பொழுது கவனமாக பயன்படுத்த வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக நடந்த சம்பவம் தான் இது. மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் 34 வயது பெண் கணக்கு அதிகாரியாக (Accounts Officer) பணிபுரிந்து வருகிறார். மே மாதம் 9 ஆம் தேதி அன்று அவரின் மொபைலுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அது என்னவென்றால், உங்களின் பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்க இதோ ஒரு எளிமையான வழி என்று ஒரு லிங்க் (Cash Surfing Network Scam) வந்துள்ளது. அந்த பெண்ணும் அதை நம்பி, அந்த லிங்கை அழுத்தியுள்ளார். பிறகு ஒரு தனியார் வங்கியின் போலி வெப்பேஜ் ஓபன் ஆனது. அதில் அந்த பெண்ணின் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு கேட்கப்பட்டது. அந்த பெண்ணும் எந்த யோசனையும் இல்லாமல், அனைத்து விவரங்களையும் உள்ளிட்டுள்ளார். அடுத்தது உங்களின் மொபைல் எண்ணுக்கு வந்த OTP-யை உள்ளிடவும் என்று வந்ததும், அதையும் கொடுத்துள்ளார். 

ரயில் ஆன்லைன் முன்பதிவில் புதிய மாற்றம்..! எப்படி முன்பதிவு செய்வது..?

இவை முடிந்து சில நேரங்களில் அவர்களின் அக்கௌன்டில் இருந்து 1000, 2000 இல்லை ரூ. 1,80/- லட்சம் எடுக்கப்பட்டது (Internet Banking  Fraud) தெரியவருகிறது. அந்த பெண் பதறி போய் வங்கியை அழைத்து தனது அக்கௌன்ட்டை பிளாக் செய்துள்ளார். எனவே, மீதி இருக்கும் பணமாவது தப்பித்துள்ளது. இதையடுத்து அந்த பெண் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

உங்களின் வங்கி தகவலை, வங்கியில் இருக்கும் யாரும் எப்பொழுதும் கேட்கமாட்டார்கள் என்று வங்கி உங்களிடம் தெளிவாக கூறுவார்கள். இது தெரிந்தும் போலியான மெசேஜ் வருவதை நம்பி நிறைய பேர் அவர்களின் வங்கி தகவல்களைக் கொடுத்துவிட்டு ஏமாறுகிறார்கள். இது குறித்து பொலிஸும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, உங்களின் வங்கி தகவலைப் பற்றி யார் போனில் கேட்டாலும் யோசிக்காமல் கட் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரிவித்து அவர்களையும் கவனமாக இருக்க சொல்லுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஒரு நொடியில் மற்றவர்களிடம் ஏன் இழக்க வேண்டும்.   

வேற லெவல் கேமரா… இன்னும் அட்டகாசமான வசதிகளுடன் சூப்பராக வெளிவந்த Vivo X80 Series மொபைல்….

online money scams, cash surfing network scam, internet banking fraud 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்