Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் ரூ.18,999/-க்கு ஒன்பிளஸ் லேட்டஸ்ட் மாடல் கிடைத்துனா விட முடியுமா? | Flipkart Oneplus Sale

Priyanka Hochumin Updated:
வெறும் ரூ.18,999/-க்கு ஒன்பிளஸ் லேட்டஸ்ட் மாடல் கிடைத்துனா விட முடியுமா? | Flipkart Oneplus SaleRepresentative Image.

ஆண்ட்ராய்டு மொபைல் பொறுத்தவரையில் ஒன்பிளஸ் மாடலுக்கு என்று தனி மவுசு உள்ளது. அதுவும் சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனின் விற்பனை அதிகமாக இருப்பதால், பிளிப்கார்ட் நிறுவனம் அந்த மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. எனவே, புது போன் வாங்க காத்துக்கொண்டிருப்பவர்கள் உடனடியாக வாங்கி பயன்பெறுங்கள். இந்த பதிவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனின் அம்சங்கள் பற்றிய முழு விவரத்தை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் சிறப்பம்சம்

120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்டவற்றை கொண்ட 6.72 இன்ச ஃபுல் எச்டிபிளஸ் எல்டிசி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 மூலம் இயங்குகிறது. இந்த ஒன்பிளஸ் மாடல் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் சிப்செட் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் பாதுகாப்பு இதனுடைய கூடுதல் சிறப்பாகும்.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்னும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டு வருகிறது. செல்பீ பயன்பாட்டிற்கு சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 67W சூப்பர்வூக ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி அமைப்பை பெறுகிறது. இதில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.1, வை-பை 6, ஜிபிஎஸ் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் அடங்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டில் வருகிறது. மேலும் இந்த மாடல் பாஸ்டல் லைம் மற்றும் குரோமேடிக் கிரே ஆகிய இரண்டு கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999/-க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.21,999/-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த போனை தற்போது ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்வதால் ரூ.1000/- குறைக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்