Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

64எம்பி கேமரா...இது போதுமே வாங்குறதுக்கு...விவோ வி29இ ஸ்மார்ட்போன் | Vivo v29e Specifications

Priyanka Hochumin Updated:
64எம்பி கேமரா...இது போதுமே வாங்குறதுக்கு...விவோ வி29இ ஸ்மார்ட்போன் | Vivo v29e SpecificationsRepresentative Image.

விவோ நிறுவனத்தின் அசத்தல் விவோ வி29இ ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி கேமரா, லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டு அறிமுகமாகியுள்ளது. அப்படியான ஸ்மார்ட்போனின் விலை, முழு விவரக்குறிப்புகள் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

விவோ வி29இ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் 3D வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. Octa-core 6nm Snapdragon 695 சிப்செட் கொண்டு இருப்பதால் அதிக வேகம் மற்றும் செயல்திறனுடன் இயங்கும்.

இந்த மாடல் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. ஸ்டோரேஜ் அதிகம் தேவைப்பட்டால் மெமரி கார்டு செலுத்தும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது. 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அனுமதிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் இடம் பெற்றுள்ளது. இதனின் முக்கிய அங்கமாக திகழ்வது, OIS ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்னும் டூயல் ரியர் கேமரா அமைப்பு தான். அடுத்ததாக, செல்பீ தேவைக்கு முன்பகுதியில் 50எம்பி கேமரா இருக்கிறது.

லேட்டஸ்ட் விவோ வி29இ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டால்பி ஆடியோ வசதி உள்ளது. அத்துடன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இறுதியாக 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.26,999/-க்கும், 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.28,999/-க்கும் விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்