Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதுசோ புதுசு! சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ரிலீஸ்.. | Samsung Galaxy Z

Nandhinipriya Ganeshan Updated:
புதுசோ புதுசு! சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ரிலீஸ்.. | Samsung Galaxy ZRepresentative Image.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் சாம்சங், தனது ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் டைப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இரண்டு மடிக்கடிக்கூடிய [Samsung Galaxy Z Fold 5 மற்றும் Samsung Galaxy Z Flip 5] சாதனங்களும் இதுவரை ஸ்மார்ட்போன் யுகத்தில் இல்லாத ஒரு ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Snapdragon 8 Gen 2 சிப்செட் வசதியுடன் வரும் இந்த இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.

புதுசோ புதுசு! சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ரிலீஸ்.. | Samsung Galaxy ZRepresentative Image

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5):

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஆனது 7.6 -இன்ச் HD கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.2 -இன்ச் Dynamic AMOLED பிரதான டிஸ்ப்ளே வசதியுடன், 120Hz புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 25W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,400mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும், இதில் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இத்துடன் முன்புறத்தில் 10எம்பி செல்பி கேமராவை கொண்டிருக்கும். விலையை பொறுத்துவரை, இந்த ஸ்மார்ட்போனானது ரூ.1,50,000 ஆரம்ப விலையை கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

புதுசோ புதுசு! சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ரிலீஸ்.. | Samsung Galaxy ZRepresentative Image

கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5):

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது, 6.7 -இன்ச் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வசதியுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும். இதோடு, 3.4 இன்ச் செகண்டரி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. 

கேமராக்களை பொறுத்தவரை, பின்புறத்தில் 12எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்ற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இத்துடன் முன்புறத்தில் 10எம்பி செல்பி கேமராவை கொண்டிருக்கும். சார்ஜிங் வசதிக்கு 3700mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.95,000 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்