Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எச்சரிக்கை.... போலியான ChatGPT செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டாம்...!

Manoj Krishnamoorthi Updated:
எச்சரிக்கை.... போலியான ChatGPT செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டாம்...! Representative Image.

தொழில்நுட்ப வளர்ச்சி எந்தளவு வளர்கிறதோ அதே அளவு சில போலித்தனமும் உருவாகிறது. இந்த டிஜிட்டல் உலகம் AI கருவிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த பல ஆராய்ச்சியில் உள்ளது.  உலகம் முழுவதும் AI பயன்பாட்டு மாறும் தருணத்தில் சில போலித்தனமான ஆப்களால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுகிறது. 

இதுபோன்ற போலித்தனமான ஆப்களால் ஏற்படும் விவாதங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இதை தடுக்க  play store யில் இருந்து அவ்வப்போது சில ஆப்களை அகற்றி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதற்கான தீர்வாக எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே தான் உள்ளது. 

போலி ஆப்கள் வரிசையில் chatGPT யும் இடம்பிடித்துள்ளது. OpenAi நிறுவனத்தின் chatGPT மாணவர்கள் மத்தியில் பிரபலமானது.  மாணவர்களின் அனைத்து கேள்விக்கும் எளிமையான தீர்வு அளித்த இந்த ஆப்பின் அதிகரிக்கும் பயன்பாடு போலி chatGPTயை உருவாக்கியது. தற்போது கூகுள் பிளேஸ்டோரில் chatGPT என்னும் பெயரில் போலித்தனமான ஆப்கள் உருவாகியுள்ளது. எனவே பதிவிறக்கம் செய்த உடனே நம்முடைய தனிப்பட்ட டேட்டா எதையும் கொடுக்காமல் இருப்பது நல்லது ஆகும்.  

OpenAI என்ற ஸ்டார்டப் நிறுவனம் உருவாக்கிய chatGPT மட்டுமே உண்மையானது. இதுவரை 1 லட்சத்திற்கு மேலானோர் போலியான ஆப்களை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரியப்படுகிறது. ஆனால் பிளே ஸ்டோரில் உள்ள சில போலி chatGPT ஆப்பின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

GPT AI Chat Chatbot Assistant, Chat GPT 3 Chat GPT AI, Talk GPT Talk to Chat GPT, GPT Writing Assistant, AI Chat, Aico GPT AI Companion, PersonAI Advanced chatbot, Emerson AI Talk & Learn and Chat To Chat with AI போன்ற ஆப்கள் போலியானது. இதுவரை ஆண்ட்ராய்டு மற்றும் iOS அறுமுகமாகவில்லை என்றாலும் Google play store மற்றும் Apple App Store இல் உள்ளது. எனவே chatGPT ஆப் பதிவிறக்கும் செய்யும்போடு சரியான ஆப்பை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பை கூட்டும்.   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்