Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கம்மி விலையில் ஸ்டைலான கூகுள் பிக்சல் 7ஏ.. மிஸ் பண்ணிடாதீங்க! | Google Pixel 7a Price in India

Nandhinipriya Ganeshan Updated:
கம்மி விலையில் ஸ்டைலான கூகுள் பிக்சல் 7ஏ.. மிஸ் பண்ணிடாதீங்க! | Google Pixel 7a Price in IndiaRepresentative Image.

கூகுள் நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 7ஏ [Google Pixel 7a] ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் அதன் முந்தைய மாடலான பிக்சல் 6ஏ [Pixel 6a] -ஐ விட பல புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் வருகிறது. பட்ஜெட் விலையில் வாங்கும் நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு என்று இந்த ஃபோன் மலிவு விலையில் வெளியிடப்படும். இந்தியா முழுவதும் வரும் மே 11 ஆம் தேதி வெளியாகயுள்ள இந்த கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை தெரிந்துக் கொள்வோம்.

கூகுள் பிக்சல் 7ஏ அம்சங்கள்:

பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் (15.49 cm), 449ppi, Amoled டிஸ்ப்ளே 1080x2400 பிக்சல்ஸ் தீர்மானம் மற்றும் 90ஹெட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. மேலும், கூகுள் டென்சர் ஜி2 சிப்செட் மூலம் ஆக்டோ கோர் சிபியு -உடன் இயங்கும் இந்த ஃபோன் 8ஜிபி ரேம் - 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும். 

பிக்சல் 7ஏ இன் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் கேமரா தான். பின்புறத்தில் 64 எம்பி + 12 எம்பி கொண்ட இரட்டை கேமரா உள்ளது. முன்புறத்தில் 10.8 எம்பி செல்ஃபி கேராவும் உள்ளது. நைட் சைட், எச்டிஆர் [HDR] மற்றும் போர்ட்ரெய்ட் மோட் உள்ளிட்ட கூகுளின் சிக்னேச்சர் மென்பொருள் அம்சங்களுடனும் கேமரா வருகிறது. 

20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 4,400mAh பேட்டரியுடன் வரும் இந்த போனில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் [On-screen Finger Print Sensor] மற்றும் சார்ஜ் செய்வதற்கு USB Type -C போர்ட் உள்ளது. இணைப்புகளை பொறுத்தவரை, இந்த போனில் Wi-Fi, ஹாட்ஸ்பாட், A-GPS, 4G VoLET, ப்ளூடூத் ஆகியவையும் உள்ளது. 

விலை எவ்வளவு?

பிக்சல் 7ஏ வின் விலையானது பிக்சல் 7 இன் விலையை விட குறைவாகவே. அதன்படி, இந்தியாவில் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,000 முதல் 50,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்