Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

பட்ஜெட் விலையில் கலக்கலான அம்சங்களுடன் POCO F5 5G அறிமுகம்.. சிறப்பு தள்ளுபடியும் உண்டு.. | POCO F5 5g Price in India

Nandhinipriya Ganeshan Updated:
பட்ஜெட் விலையில் கலக்கலான அம்சங்களுடன் POCO F5 5G அறிமுகம்.. சிறப்பு தள்ளுபடியும் உண்டு.. | POCO F5 5g Price in IndiaRepresentative Image.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ [POCO], போக்கோ எஃப்5 5ஜி [POCO F5 5G] மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோ 5ஜி [POCO F5 Pro 5G] என்ற இரண்டு புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த இரண்டு புதிய போக்கோ ஸ்மார்ட்போன்களில் வெண்ணிலா வேரியண்ட்யான போக்கோ எஃப்5 5ஜி மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

போக்கோ எஃப்5 5ஜி அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

இந்த Poco F5 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் Qualcomm Snapdragon 7+ Gen 2 சிப்செட் ஆகும், இது போனின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், கேம் பிரியர்கலுக்கு அற்புதமான கேமிங் அனுபவத்தை வழங்கும் விதமாக புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. POCO F5 இல் பிராண்டால் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் v5 கொடுக்கப்பட்டுள்ளது. 6.67 இன்ச் அளவு கொண்ட பஞ்ச்-ஹோல் பொருத்தப்பட்ட டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 395ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது.

POCO F5 ஸ்மார்ட்போனின் உள்ளே 5000mAh நீக்க முடியாத பேட்டரி நிறுவப்பட்டுள்ளது. இந்த லி-பாலிமர் பேட்டரியை 67W டர்போ சார்ஜிங் சிஸ்டம் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும், POCO F5 ஆனது 256GB இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. அதன் இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சாதனம் 4G VoLTE நெட்வொர்க்குகள் மற்றும் 5G நெட்வொர்க்குகளுடன் மொபைல் ஹாட்ஸ்பாட், புளூடூத் v5.3, A-GPS Glonass உடன் Glonass, Wi-Fi, NFC மற்றும் USB Type-C ஆகியவற்றை ஆதரிக்கிறது.

  • டிஸ்ப்ளே: 6.67 இன்ச் [2400x1080]
  • ப்ராஸஸர்: ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 2
  • ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 13
  • ரேம்: 8 ஜிபி
  • ஸ்டோரேஜ்: 256 ஜிபி
  • பேட்டரி திறன்: 5000mAh

கேமரா எப்படி?

கார்பன் பிளாக், ஸ்னோஸ்டார்ம் ஒயிட் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ என்ற மூன்று கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) உடனான 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்ட பின்பக்க கேமரா உள்ளது. அதேபோல், முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் 2x ஆப்டிகல் ஜூம் சென்சார் உள்ளது மற்றும் கிரியேட்டிவ் புகைப்படம் எடுப்பதற்காக ஏழு ஃபிலிம் கேமரா முறைகளை வழங்குகிறது. 

  • முன் கேமரா: 16 எம்.பி
  • பின் கேமரா: 64MP + 8MP + 2MP

போக்கோ எஃப்5 5ஜி விலை:

போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனது மொத்தம் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷங்களில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகும். அதேபோல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.33,999 ஆகும்.

இருப்பினும் போக்கோ இந்தியா அறிவித்துள்ள அறிமுக சலுகையின் கீழ் சிறப்பு விலையில் வாங்கிக்கொள்ள முடியும். அதாவது, ஐசிஐசிஐ பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.26,999 க்கும், 12ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.30,999 க்கும் வாங்கிக்கொள்ளலாம். மேலும், தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை சேல்ஸ் செய்ய விரும்புவோருக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும் இந்த Poco F5 ஸ்மார்ட்போனை வரும் மே 16 ஆம் தேதி முதல் Flipkart இல் பிரத்தியேகமாக கிடைக்கும்.

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 29,999
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.33,999

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்