Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,890.88
-251.92sensex(-0.34%)
நிஃப்டி22,145.85
-66.85sensex(-0.30%)
USD
81.57
Exclusive

Habit Tracker App Free Android: இன்னைக்கு நம்ப இத செஞ்சே ஆகணும்...ம்ம் விடு நாளைக்கு பாத்துக்கலாம்! இனிமே இந்த வேலையே கிடையாது

Priyanka Hochumin July 13, 2022 & 12:15 [IST]
Habit Tracker App Free Android: இன்னைக்கு நம்ப இத செஞ்சே ஆகணும்...ம்ம் விடு நாளைக்கு பாத்துக்கலாம்! இனிமே இந்த வேலையே கிடையாதுRepresentative Image.

Habit Tracker App Free Android: நம்மிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கத்தை கண்காணிக்க உருவாக்கப்பட்ட ஆப் தான் இந்த ஹாபிட் ட்ராக்கர். இதனின் பயன்பாடு, மற்றும் ரெவியூ போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக 'என்னடா வாழ்க்கை இது?' என்று நமக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் தோன்றக்கூடிய விஷயம் தான். ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தன்னை எந்த அளவுக்கு சீராக பராமரிக்கிறானோ அவனுக்கு இதுபோன்ற விஷயங்கள் பொருட்டாகவே இருக்காது. சரி இதனை புரிந்துகொண்டு நல்ல பழக்கங்கள் கடைபிடிப்போம் என்று பில்ட்டப் செய்து முயற்சிப்போம். ஆனால் ஒரு சில நாளில் அதனை தொடரமுடியாமல் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி நிறுத்திவிடுவோம். உங்களுக்கு தெரியுமா? ஒரு மனிதன் ஒரு நல்ல பழக்கத்தை தனக்குள் வளர்த்துக்கொள்ள சுமார் 18 முதல் 66 நாட்கள் ஆகும். அப்படியென்றால் நாம் எவ்ளோ உறுதியாக அதை பின்பற்ற வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். இதுவே அந்த பழக்கத்தை நிராகரிக்க வெறும் 3 நாட்கள் போதும். நம் முன்னோர்களின் பழமொழியைப் போல் 'நல்ல பேர் வாங்குறதுக்கு பல வருஷம் ஆகும், ஆனால் கேட்ட பேர் வாங்க ஒரு நொடி போதும்' அதுபோல தான்.

Habit Tracker பயன்பாடு

இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பிறகு லாகின் செய்து உள்நுழையவும். அப்பொழுது ஷ்கிரீனில் + சிம்பல் ஒன்று இருக்கும். அதனை கிளிக் செய்தால், ஏற்கனவே புரோகிராம் பழக்கங்கள் தோன்றும். உதாரணமாக வாக்கிங், ரன்னிங், யோகா, சைக்கிளிங், மெடிடேஷன், வாசிப்பு, கற்றல், மூச்சுப்பயிற்சி, தண்ணீர் குடிப்பது போன்றவை இருக்கும். இவற்றுள் ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய விரும்பும் பழக்கங்களை தேர்வு செய்து உங்களின் தினசரி கேலண்டரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பயன்பாட்டிற்கான டிப்ஸ்

அதில் குறிப்பிட்டுள்ள பழக்கங்களின் பெயர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றிக்கொள்ளலாம்.

எப்பொழுது உங்களை அலெர்ட் செய்யவேண்டும் என்று திட்டமிடலாம்.

வாரத்தின் எந்தெந்த நாட்களில் மற்றும் நேரத்தில் நோட்டிஃபை செய்யவேண்டும் என்று செட் செய்யலாம்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ரிமைண்டரை நிறுத்திக்கொள்ளலாம்.

இங்கு புரோகிராம் செய்யப்பட்ட பழக்கங்களை தவிர்த்து நீங்கள் ஏதேனும் ஒன்றை சேர்க்க விரும்பினால், அதனை செய்யலாம்.

இன்றைக்கான பழக்கங்களை முடித்துவிடீர்கள் என்றால், ஹோம் பேஜில் இருந்து ஸ்வைப் செய்து Completed என்று பதிவு செய்துகொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு உடல் நலம் சரியாக இல்லை என்றால், அலெர்ட் மெசேஜ் வருவதை தவிர்க்க செட்டிங்ஸில் 'Vacation Mode' என்பதை செலக்ட் செய்யலாம்.

இதுவே ஒரு பழக்கம் சற்று கடினமாக அல்லது வேறேதேனும் காரணிகளாக இருந்தாலும் சரி, அதனை டெலீட் செய்ய ’ஹேபிட் மேனேஜர்’ என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

சரி இதெல்லாம் எதுக்கு தேவையா?

இந்த கேள்வி உங்களுக்கு தோன்றினால் அதற்கான பதில் இதோ. இதன் மூலம் தினமும் நாம் நல்ல பழக்கங்களை பின்பற்றி வருகிறோம் என்ற நம்பிக்கை ஏற்படும். ஒரு வேளை சலிப்பாகி இன்று ஒரு நாள் மட்டும் ரெஸ்ட் எடுத்துக்கலாம் என்று நாம் நினைத்தாலும், இதில் இருந்து வரும் அலெர்ட் மெசேஜ் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல உதவுகிறது. ஹோம்பேஜ்-க்கு அடுத்த ஒரு பக்கத்தில் கேலண்டர் உள்ளது. அதில் நாம் தினமும் எந்த அளவிற்கு பழக்கங்களை பின்பற்றி உள்ளோம் என்று குறித்து வைத்துக்கொண்டு நம்மை நாமே கண்காணிக்க உதவுகிறது.  இவற்றையெல்லாம் அந்த நாளின் இறுதியில் பார்த்துவிட்டு நமக்கு நாமே கைதட்டி சபாஷ் சொல்லிக்கலாம். இப்ப சொல்லுங்க இந்த ஆப் நமக்கு யூஸ் ஃபுல்லா இருக்கா? இல்லையா?  

ரேட்டிங்

இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகியாய் டிவைஸ்களில் டவுன்லோட் செய்ய முடியும். iOS இல் இந்த ஆப்பிற்கு 4.8/5 என்றும், ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த ஆப்பிற்கு 2.8/5 என்றும் ரேட்டிங் கொடுத்துள்ளனர். 

Habit Tracker App Free Android, habit tracker app android, habit tracker app free, habit tracker app ios, habit tracker app for windows, to do list and habit tracker app, best goal and habit tracker app, habit tracker app ios and android, habit tracker app ios reddit, habit tracker app android reddit,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.       


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்