Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Hide Last seen in True Caller App in Tamil: ட்ரூ காலரில் இந்த ஆப்ஷன் இருக்கு தெரியுமா? இதை யூஸ் பண்ணி அதை மறைச்சிடுங்க!

Priyanka Hochumin July 11, 2022 & 11:30 [IST]
How to Hide Last seen in True Caller App in Tamil: ட்ரூ காலரில் இந்த ஆப்ஷன் இருக்கு தெரியுமா? இதை யூஸ் பண்ணி அதை மறைச்சிடுங்க!Representative Image.

How to Hide Last seen in True Caller App in Tamil: நம்மில் பல பேர் ட்ரூ காலர் ஆப் பயன்படுத்தியது உண்டு. அதில் இருக்கும் ஒரு சில டிப்ஸ் & ட்ரிக்ஸ் பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிந்துகொள்வோம்.

நமக்கு ஒரு நாளைக்கு தெரிந்தவர்களிடம் இருந்து 5 போன் கால்ஸ் வரும். ஆனால் மீதமுள்ள 10 போன் கால்ஸ் யாருன்னே தெரியாதவர்களிடம் இருந்து தான் வரும். அதில் ஒரு சில சமயத்தில் பயந்து போய் அந்த போன் கால்-ஐ எடுக்க மாட்டோம். இருப்பினும் ஒரு சந்தேகம், ஒரு வேளை நமக்குத் தெரிஞ்சவங்களாக இருக்குமோ என்ன பண்றது? என்று யோசிப்போம். அது போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடவே உருவாக்கப்பட்டது தான் ட்ரூ காலர் ஆப். இது புது நம்பர் மூலம் போன் வந்தால் யார் என்று காண்பிக்க உதவுகிறது. இந்த ஆப் உங்களிடம் இருக்கா? அதில் இருக்கும் முக்கிய அம்சங்கள் பற்றி தான் கூறப்போகிறோம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்படி ஒரு சிக்கலா?

நீங்கள் ட்ரூ காலரை ரெகுலராக பயன்படுத்தியவராக இருந்தால் "Availability" என்னும் அம்சத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அது இப்ப ஒரு வேளை அவசர தகவலை ஒருவருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் முக்கிய வேலையாக இருக்கலாம், இல்லை வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கலாம். அதனால் அவர் இப்பொழுது Available ஆக இருக்கிறாரா? இல்லையா? என்பதை காண்பிக்கும் அம்சம் தான் Availability.

ஒரு லைட் இவ்ளோ Info குடுக்குமா?

இப்ப நீங்க ஒருவருக்கு போன் செய்யனும், அப்ப அவருடைய பேருக்கு பக்கத்துல "சிவப்பு நிற பெல்" ஐகான் இருந்தால் அவர் போனை சைலன்ட் மோட் இல் வைத்துள்ளார் என்று அர்த்தம்.

அதுவே "சிவப்பு நிற போன்" ஐகான் இருந்தால் அவர் வேறொரு நபருடன் பேசிக் கொண்டுள்ளார் என்று அர்த்தம்.

அது மட்டும் இல்ல அந்த நபர் கடைசியாக ட்ரூ காலர் ஆப்பிற்குள் வந்து சென்றார் என்பதை தெரிந்துகொள்ளவும் முடியும். அது தான் "லாஸ்ட் சீன்" அம்சம்.

இதுக்கு ஒன்னு வேணும்

மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களை நீங்க பெற வேண்டும் என்றால், நீங்கள் ஏதேனும் ஒரு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள மற்றும் ஆப்பில் ஆக்டிவ் ஆக உள்ள ட்ரூகாலர் யூசராக இருக்க வேண்டும்.

சரி, இதையெல்லாம் நம்மகிட்ட இருக்கு அப்ப யாருடைய விவரங்களையும் தெரிஞ்சிக்க முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு தோணுமே கரெக்ட்டா. அதுக்கான பதில், நீங்கள் பார்க்க நினைக்கும் நபரின் போனில் ட்ரூ காலர் ஆப் இன்ஸ்டால் ஆகி இருக்க வேண்டும். அதே போல் அந்த குறிப்பிட்ட "Availability" அம்சத்தை ஆன் செய்து இருக்க வேண்டும்.

இது ஓகே அப்ப பிரைவஸி

இதெல்லாம் ஒருபக்கம் நல்லதா இருந்தாலும் இன்னொரு பக்கம் நம்முடைய பிரைவஸிக்கு பங்கமாக இருக்கோ என்று தோன்றும். ஆமா இப்ப நம்ப பிஸியா இருக்கோம்? வேற ஒரு நபருடன் பேசிட்டு இருக்கோம்னு? மத்தவங்களுக்கு தெரியறது கரெக்ட்டா என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு வழி இருக்கு. அவர்கள் அந்த குறிப்பிட்ட அம்சத்தை ஆஃப் செய்யலாம். அது எப்படி?

  • உங்களுடைய லாஸ்ட் சீன் விவரங்களை தெரியப்படுத்தும் Availability அம்சத்தை ஆஃப் செய்ய முதலில் ட்ரூ காலர் ஆப்பை ஓபன் செய்யவும்.
  • அடுத்து வலது பக்கத்தில் மேலே இருக்கு த்ரீ டாட்ஸ் ஐகானை கிளிக் பண்ணவும்.
  • பிறகு செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து திறக்கவும்.
  • அடுத்த படியாக பிரைவஸி ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
  • இப்பொழுது Availability என்ற ஆப்ஷனை கண்டறிந்து அதை ஆஃப் செய்யவும். 

How to Hide Last seen in True Caller App in Tamil, how to hide last seen on truecaller 2022, how to hide last seen on truecaller in android, how to hide my last seen in true caller,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்