Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

அதிக வட்டிக்கு கடன் தந்து அட்டூழியம் செய்யும் ஆன்லைன் லோன் ஆப்ஸ்...அரசின் அதிரடி அறிவிப்பு!

Priyanka Hochumin October 31, 2022 & 16:00 [IST]
அதிக வட்டிக்கு கடன் தந்து அட்டூழியம் செய்யும் ஆன்லைன் லோன் ஆப்ஸ்...அரசின் அதிரடி அறிவிப்பு!Representative Image.

நடுத்தர மக்களின் ஒரு மாதம் சம்பாத்தியம் அவர்களின் அன்றாட தேவைகளுக்கே சரியாகிவிடுவதால் அவர்களுக்கு வேற வழியின்றி கடன் வாங்க ஆரம்பிப்பார்கள். முன்பெல்லாம் மிகவும் நம்பகமான நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் ஆகியவர்களிடம் இருந்து தான் கடன் வாங்குவார்கள். ஆனால் நாகரீகம் வளர வளர கடன் தருவதற்காகவே நிறைய நிறுவனங்கள் உருவாகியுள்ளனர். அதில் கடன் வாங்கிக் கொண்டிருந்த காலம் போயி இப்போ யார் என்று தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் கடன் வாங்கி சீரழிகிறார்கள்.

சமீப காலமாக ஆன்லைன் லோன் ஆப்ஸ்-களின் அட்ராசிட்டிஸ் அதிகமாகி விட்டது. பணத்தேவை அதிகம் இருக்கும் நடுத்தர மக்களை குறிவைத்து கடன் அளிக்கின்றனர். அதற்கு அதிக வட்டி, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, குடுத்த கடனை சரியான நேரத்தில் தராதவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வது என்று அநியாயமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி பிளாக் மெயில் செய்வது, அவமானப்படுத்துவது போன்ற ஆன்லைன் லோன் ஆப்களின் தொல்லையால் நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் ஆன்லைன் லோன் ஆப்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கும், பொது மக்களின் பாதுகாப்பிற்கும், தேச பாதுகாப்பிற்கும் ஆபத்து என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழே வருவதால், ஏதேனும் தவறுகள் நடந்தால் அதனை கண்டிப்பார்கள். ஆனால் இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் அதற்குள் வராததால் எதுவும் செய்ய முடியவில்லை. இது குறித்து நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது. எனவே, இந்த விவாகரத்திற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது.

மக்களே நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள். பணம் எப்படியோ கிடைக்குது என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்