Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவ்ளோ கம்மி விலையில, இப்படி ஒரு போன் கிடைக்கவே கிடைக்காது..! | Vivo iqoo Z7s 5g

Gowthami Subramani Updated:
இவ்ளோ கம்மி விலையில, இப்படி ஒரு போன் கிடைக்கவே கிடைக்காது..! | Vivo iqoo Z7s 5gRepresentative Image.

Vivo நிறுவனம் iQoo z7s மொபைலை மே 24 ஆம் நாள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது iQoo z7 தொடரின் சமீபத்தில் வெளிவந்த மொபைல் ஆகும். இந்த மொபைல் MediaTek Dimensity 920 SoC-ஐக் கொண்டுள்ளது. இதன் பேட்டரியானது 4,500mAh Li-ion பேட்டரி யூனிட்டைக் கொண்டிருக்கும். இதன் மூலம், 44 வாட் ஃப்ளாஸ் சார்ஜ் வசதியைத் தரும்.

மேலும், இந்தியாவில் iQoo Z7s இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அதாவது, 8GB RAM மற்றும் 6GB RAM வகைகளில், 128 GB Internal Memory-ஐக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்படை விலையானது ரூ.18,999 ஆகும். மேலும், 8GB RAM மொபைலின் விலை ரூ.19,999 ஆகும். இவற்றை பயனர்கள் iQoo-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அமேசான் மூலமாகவும் பெறலாம்.

இந்த iQoo Z7s 5G மொபைல் ஆனது இரு வேறு வண்ணங்களில் அதாவது Norway Blue மற்றும் Pacific Night கலரில் கிடைக்கிறது.

iQoo Z7s 5G அம்சங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட iQoo Z7s 5G  மொபைல் ஆனது இரட்டை நானோ சிம் ஸ்லாட்டைக் கொண்டிருக்கும். இத்துடன், Micro SD Card-க்கான ஒரு Hybrid Slot-ஐக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே பேனல் ஆனது 6.38 இன்ச் முழு எச்டி  அளவு கொண்டிருக்கும். மேலும், இது 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இதன் OS ஆனது, Android 13 அடிப்படையிலான Funtouch OS 13 Out of the Box-ல் இயங்குகிறது.

மேலும், இந்த iQoo வகை ஸ்மார்ட்போன் ஆனது Adreno 619L GPU உடன் இணைக்கப்பட்டுள்ள Octa-core Qualcomm Snapdragon 695 5G SoC, 8GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 இன்டெர்னல் மெமரியைக் கொண்டிருக்கும். இதன் MicroSD card-ன் மூலம் 1TB வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் இரட்டை பின்புற கேமரா ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சாரை வழங்குகிறது. மேலும், இதன் முன் பக்க கேமரா ஆனது, 16 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டு விளங்குகிறது. இந்த மொபைலின் எடை சுமார் 172 கிராம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் in-display finger sensor மற்றும் 3.5mm ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்