Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மனிதர்களுக்கு மட்டும் எப்படி காதல் வரும்..? எதாவது அறிவியல் காரணம் உண்டா..!

Manoj Krishnamoorthi Updated:
மனிதர்களுக்கு மட்டும் எப்படி காதல் வரும்..? எதாவது அறிவியல் காரணம் உண்டா..! Representative Image.

புவியில் அவதரித்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் இருக்கும் ஒற்றுமை தன் அடுத்த சன்னதியை உருவாக்குவது. இது செடி, கொடி முதலிய தாவரம் முதல் புழு, மிருகம் என அனைத்துக்கும் பொதுவான ஒன்றுதான். இதில் மனிதர்களும் விதிவிலக்கு அல்ல, ஆனால் மனித ஜீவராசிக்கு மட்டும் இருக்கும் ஒரு உணர்வு காதல் மற்ற உயிரினங்களுக்கு இல்லையா..? இந்த மாதிரியான கேள்விக்கு நடுவில் மனிதனுக்கு ஏற்படும் காதல் பற்றிய சிறிய அறிவியல் தொகுப்பை காண்போம்.

மனிதர்களுக்கு மட்டும் எப்படி காதல் வரும்..? எதாவது அறிவியல் காரணம் உண்டா..! Representative Image

மனிதனுக்கு மட்டும் எப்படி காதல் வருகிறது...? இது கொஞ்சம் குதர்க்கமான கேள்வி தான்.  இதற்கான அறிவியல் காரணம் சொல்வது என்பது அரிதான காரியம் ஆகும். பொதுவாக ஒரு கருத்து  உள்ளது, நம் உடலில் இருக்கும் சில வேதியியல் மாற்றம் தான் சில மாறுபட்ட எமோஷனாக வெளிப்படுகிறது என்றும் அதுவே காதல் என்றும் கூறப்படுகிறது. 

காதலின் அடிப்படை உணர்வு காமம் என்ற கருத்து உதிப்பது வழக்கம் ஆனது தான்.  பல்லாயிர உயிர்களுக்கு மத்தியில் தனிப்பட்ட மனிதனுக்கு ஒரே ஒரு எதிர் பாலினத்தின் மீது மட்டும் எப்படி இந்த உணர்வு அளவு கடந்ததாக உருவாகும்..? இது குறித்த குழப்பத்திற்கு  ஒரு சிறிய புரிதலே இதை தெளிவாக வித்தியாசப்படுத்தும்.  காமம் மற்றும்  ஈர்ப்பு ஆகிய இரண்டையும் ஏற்படுத்தும் ஹார்மோனின் கலவையாக தான் காதல் பார்க்கப்படுகிறது. 

மனிதர்களுக்கு மட்டும் எப்படி காதல் வரும்..? எதாவது அறிவியல் காரணம் உண்டா..! Representative Image

இதை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் காமம் இனப்பெருக்கத்தை உண்டாக்கும்,  ஈர்ப்பு ஒருவனின் மனதளவில் இந்த துணையுடன் இருந்தால் சந்தோஷமாக இருக்கும் என எண்ணத்தை ஏற்படுத்தும். இவ்விரண்டு உணர்வு ஒரே நேரத்தில்  தோன்றுமானால் அந்த உணர்வு நோர்பைனெப்ரின் ஹார்மெனை அதிகமான டோப்ர்மைன் வெளிப்பாடாக ஏற்படுத்தும். இந்த உணர்வு அவர்களுடன் பழக வேண்டும் எண்ணத்தை ஊக்கப்படுத்துகிறது.

அதிக நேரம் ஒரே மனிதர் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமாம். இவ்வாறு ஏற்படும் உணர்வு காதல் என்னும் பெயரில் நம்முடன் உலவுகிறது என்பது எங்கள் கருத்து.  எது எப்படியோ நம் அவசரமான ஓட்டத்தில் ஒரு இனிமையான வேகத்தடையாக காதல் இருக்கிறது என்பது புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியது ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்