Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்ட்ராய்டு போனில் எப்படி 5G சேவை பெறுவது...? | Tips to activate 5g in android tamil

Manoj Krishnamoorthi Updated:
ஆண்ட்ராய்டு போனில் எப்படி 5G சேவை பெறுவது...? | Tips to activate 5g in android tamilRepresentative Image.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4g இல் இருந்து 5g மாறத் தொடங்கிவிட்டது. இதில் ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள்  இந்தியாவில் சில நகரங்களில் 5G சேவைக்கான வேலையை தொடங்கியது. இந்த 5G சேவை நிச்சயமாக 2023 இல் இருந்து நம் அனைவரிடமும் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கலாம். 

5G சேவையை பெற போன் நெம்பரை மாற்றவோ சிம்மை மாற்றவோ தேவையில்லை. 5G சேவையை சப்போர்ட் செய்யும் போன் கையில் இருந்தாலே போதும். அப்போ புது மொபைல் தான் வாங்கனும் என நினைக்க வேண்டாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய செட்டிங் மூலம் நம் மொபைலில் 5G சேவையை பெறலாம். 

Andriod போனில் எப்படி 5G பெறுவது...?

  • முதலில் நம் மொபைலில் Setting ஓபன் செய்து கொள்ள வேண்டும்.  பின்னர், 'MObile Network'யை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அந்த பக்கத்தில் 'Preferred Network' என்ற ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்து 5G/4G/3G/2G/(Auto) என்ற ஆப்சனை செலைக்ட் செய்தாலே போதும்.
  • இப்போது, நம் போனில் 5G சேவை அறிகுறி மேல் முனையில் காட்டும். ஒருவேளை இதை உறுதி செய்து கொள்ள விரும்பினால் mobile network ஒருமுறை ஆப் செய்து ஆன் செய்து பார்த்தால் 5G அறிகுறி வரும்.
  • இந்த மாற்றங்கள் எல்லாம் செய்து மொபைல் 5G சேவைக்கு மாறவில்லை என்றால் ஸ்மார்ட்போனை Restart செய்வதன் மூலம் 5G சேவை கிடைக்கும். 

மற்றொரு முயற்சியாக "*#*#4636#*#*" என dialer zoneல் டைப் செய்தால் 'Phone Information'என ஒரு பேட்ஜ் திறக்கும். அதில் Set Preferred Network Type என்ற ஆப்சனை க்ளிக் செய்து கொள்ளவும். இறுதியில் "NR only" அல்லது "NR/LTE" ஆப்சனை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஆப்சன் 5g இல்லாத இடத்திற்கு மட்டுமே  4G சேவையை அளிக்கும்.   



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்