Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதெல்லாமாவா தேடியிருக்காங்க நம்ப பயலுங்க Google வெளியிட்ட பட்டியல்|Best of 2022 google search result

Priyanka Hochumin Updated:
இதெல்லாமாவா தேடியிருக்காங்க நம்ப பயலுங்க Google வெளியிட்ட பட்டியல்|Best of 2022 google search result Representative Image.

இதோ 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போது அனைத்து துறையிலும் "Best of 2022" என்று குறிப்பிடுவார்கள். அதாவது அந்த ஆண்டில் அதிகம் மக்களின் கவனத்தை ஈர்த்தது எது என்ற பட்டியலை வெளியிடுவார்கள். அதே போலவே நம்மால் ஒரு நிமிடம் கூட அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்த Google, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த தேடல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சரி, இப்ப நம்ம ஆளுங்க எதையெல்லாம் தேடி இருக்காங்கன்னு பார்க்கலாமா!

இதெல்லாமாவா தேடியிருக்காங்க நம்ப பயலுங்க Google வெளியிட்ட பட்டியல்|Best of 2022 google search result Representative Image

தேடிய விஷயங்கள்:

என்ன தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கோவிட்-19 பற்றி பேசி, தேடினாலும் அதை விட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் தான் அதிக ஆர்வம் கட்டியுள்ளதாக தெரிகிறது. 2022 ஆம் ஆண்டின் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் முதலில் இருப்பது IPL, இரண்டாம் இடத்தில் இருப்பது கோவின் ஆப் மற்றும் மூன்றாவதாக FIFA உலகக்கோப்பை உள்ளது.

இதெல்லாமாவா தேடியிருக்காங்க நம்ப பயலுங்க Google வெளியிட்ட பட்டியல்|Best of 2022 google search result Representative Image

தேடப்பட்ட நபர்கள்:

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதலில் இருப்பது பாஜக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முதல் இடத்திலையும், இரண்டாம் இடத்தில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் ரிஷி சுனர் மூன்றாவது இடத்திலையும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து முக்கிய பிரபலங்களுள் தொழிலதிபர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென் இருவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதெல்லாமாவா தேடியிருக்காங்க நம்ப பயலுங்க Google வெளியிட்ட பட்டியல்|Best of 2022 google search result Representative Image

சிறந்த பயன்பாடுகள்:

கூகுளில் தேடல்கள் மட்டும் இல்லாமல் நிறைய ஆப்ஸ் இருக்கிறது. அதில் Google Play-வில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த பயன்பாடுகள் என்ன என்று கூகுள் அறிவித்துள்ளது. அதனுள் Turnip - Talk, chat மற்றும் stream ஆகியவை fun apps-கள் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை Filo: Instant 1-to-1 tutoring பெற்றதாக கூறப்படுகிறது.

இதெல்லாமாவா தேடியிருக்காங்க நம்ப பயலுங்க Google வெளியிட்ட பட்டியல்|Best of 2022 google search result Representative Image

விருது வென்ற ஆப்-கள்:

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் குறிப்பிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கிய ஆப்ஸ்-களுக்கு விருது வழங்குவது வழக்கம். அதே போல 2022 ஆம் ஆண்டில் தினசரி அத்தியாவசிய ஆப் என்ற பட்டத்தை ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் பெறுகிறது. மூத்த குடிமக்கள் அதாவது வயதானோர் நன்மைக்கான சிறந்த பயன்பாடாக கியாஸ் இடம்பெற்றுள்ளது. இதே போல சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான ஆப் ஸ்டார் விருது வென்றவர்களை அறிவித்து கௌரவித்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்