Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

Dell G15 5525 Review: கேமிங் இல் ப்ரோவாக இருப்பவர்களுக்கு ஏற்ற லேப்டாப்...மொத்தம் இந்து வேரியன்ட்களில்! இதுக்கு மேல என்ன வேணும்?

Priyanka Hochumin June 22, 2022 & 12:15 [IST]
Dell G15 5525 Review: கேமிங் இல் ப்ரோவாக இருப்பவர்களுக்கு ஏற்ற லேப்டாப்...மொத்தம் இந்து வேரியன்ட்களில்! இதுக்கு மேல என்ன வேணும்?Representative Image.

Dell G15 5525 Review: டெல் நிறுவனம் நேற்று இந்தியாவில் AMD SoC மூலம் இயங்கும் G15 5525 லேப்டாப்பை கேமர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்க கேமிங்ல ப்ரோவா, இந்த லேப்டாப் உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். இந்த லேப்டாப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் அனைத்து விவரங்கள் இந்த பதிவில் உள்ளது.

டெல் G15 5525 கேமிங் லேப்டாப்

இந்த லேப்டாப் இல் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 சீரிஸ் ஜிபியு மற்றும் அடுத்த ஜென் ஏஎம்டி ரைசன் 6000எச் சீரிஸ் SoC வரை அனைத்தும் உள்ளது. மேலும் கேமர்களுக்கு பிடிக்கும் வகையில் மொத்தம் ஐந்து வெவ்வேறு கட்டமைப்பு விருப்பங்களில் இந்த லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேம் பத்தி தெரியாதவங்களுக்கு இது கொஞ்சம் புதுசா இல்ல புரியாம இருக்கலாம். ஆனால் கேமிங்ல சாம்பியனாக இருக்கிறவங்க இந்த தகவல் உபயோகமாக இருக்கும். என்னென்னா, இந்த லேப்டாப் கேம் ஷிப்ட் செயல்பாட்டுடன் வருகிறது - இதை வைத்து பயனர்களை டைனமிக் செயல்திறன் பயன்முறையை எனேபிள் (Enable) செய்ய முடியும். பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, லேப்டாப் ரேம் 8 ஜிபி முதல் 16 ஜிபி வரை மாறுபட்டுள்ளது.

டெல் G15 5525 அம்சங்கள்

புத்தம் புதிய டெல் G15 5525 லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 250 nits பிரைட்னஸ் மற்றும் ஃபுல் எச்டி ரிசொல்யூஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மாடல்களில் வெளியான ஐந்து வெவ்வேறு கட்டமைப்பு லேப்டாப்களில் டிஸ்ப்ளே அம்சங்கள் எல்லாம் ஒன்றாகத் தான் இருக்கும், ஒன்றைத் தவிர.


BSNL New Offer Plan: இது நான்குலையும் எது நமக்கு ஏத்தது தெரியுமா? இதை பாருங்க கண்டிப்பா தெரிஞ்சிப்பீங்க!


வேரியன்ட்களில் இருக்கும் மாற்றங்கள்

பேஸ் வேரியன்ட் - அட்டகாசமான இந்த லேப்டாப் இன் பேஸ் வேரியன்ட் AMD Rembrandt R5 SoC உடன் 8GB ரேம், 512GB CL35 M.2 Gen 4 SSD மற்றும் Nvidia RTX 3050 4GB GDDR6 GPU உடன் வருகிறது. மேலும் இது விண்டோஸ் 11-ஐ அடிப்டையாகக் கொண்டு இயங்குகிறது மற்றும் ஆரஞ்சு பேக்லிட் கீபோர்டைக் கொண்டுள்ளது. பேஸ் வேரியன்டில் இரண்டு உள்ளடக்கியது, அதில் முதல் மற்றும் இரண்டாம் வேரியன்டிற்கு இருக்கும் வித்தியாசம் ரேம் மட்டும் தான். அதனால் நீங்கள் கேம் எப்பையாவது விளையாடுபவராக இருந்தால் தாராளமாக இந்த மாடல் லேப்டாப்பை வாங்கலாம்.

மூன்றாவது வேரியன்ட் - முதல் இரண்டில் இருக்கும் அதே விவரக்குறிப்புகள் தான் இந்த வேரியன்ட் லேப்டாப்பிலும் உள்ளது. இருப்பினும் முந்தைய இரண்டை விட AMD Rembrandt R7 மேம்படுத்தப்பட்டுள்ளது. இது கேம் விளையாட கற்றுக்கொள்பவரா? இது உங்களுக்கு ஏத்த சாய்ஸ்.

நான்காவது வேரியன்ட் - மூன்றாவதை விட சற்று வேகமாக செயல்பட Nvidia RTX 3050 Ti GPU ஐப் பெறுகிறது இந்த Dell G15 5525 நான்காவது வேரியன்ட் லேப்டாப். இந்த வேரியன்ட் லேப்டாப் கேமிங் இல் எப்படியாவது வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஐந்தாவது வேரியன்ட் -  இறுதியாக நாம் அனைவரும் எதிர்பார்த்த லேட்டஸ்ட் வேரியன்ட் லேப்டாப். இது கேமிங் இல் ப்ரோவாக திகழும் கேமர்களுக்கு ஏற்ற சாய்ஸ். மற்ற வேரியன்ட்களை விட சிறந்த SoC ஐப் இந்த மாடல் பெறுகிறது. நான்காவது வேரியன்டை ஓரம்கட்டும் வகையில் Nvidia RTX 3060 6GB GDDR6 GPU மற்றும் 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய காட்சி போன்றவற்றை இந்த வேரியன்ட் லேப்டாபில் கிடைக்கிறது.


Captcha Code Latest News: இனிமே இந்த நச்சு புடிச்ச வேல இல்ல...எதை பற்றின்னு தெரிஞ்சிக்கோங்க!


டெல் G15 5525 விலை

டெல் நிறுவனம் புதிதாக வெளியிட்ட G15 5525 லேப்டாபின் பேஸ் வேரியன்ட் 8GB RAM உடன் AMD Rembrandt R5 SoC லேப்டாபிற்கு ரூ. 83,990/- மற்றும் 16 ஜிபி ரேம் மாறுபாட்டிற்கு ரூ. 89,990/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் AMD Rembrandt R7 SoC கொண்ட மாறுபாடு ரூ. 1,02,990/-க்கும், Nvidia RTX 3050 Ti GPU கொண்ட லேப்டாபின் ரூ. 1,07,990/- என்றும் விற்பனையாகிறது. இறுதியாக ப்ரோ லேப்டாப், என்விடியா ஆர்டிஎக்ஸ் 3060 6ஜிபி ஜிடிடிஆர்6 மாறுபாட்டின் விலை ரூ. 1,27,990/- ஆகும்.

மேலும் டார்க் ஷேடோ கிரே (Dark Shadow Grey) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) ஆகியாய் நிறங்களில் கிடைக்கிறது. இதை வாங்க நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட், டெல் பிரத்தியேக கடைகள், பெரிய சில்லறை கடைகள் ஆகியாய் இடங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Dell g15 5525 review, dell g15 5525 specs, dell g15 5525 reddit, dell g15 ryzen edition 5525, dell g15 5525 gaming laptop, dell g15 5525 variants, dell g15 5525 price in india,  


LG OLED Rollable TV Price: ரூ. 75,00,000/-க்கு இந்த ஸ்மார்ட் டிவி வாங்குறதுக்கு...நாம வேற ஏதாவது பண்ணிட்டு போய்டலாம்! இதுல என்ன இருக்கு?


உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்