Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to File Register Cyber Crime Complaint: Online மூலம் பணம் காணாமல் போகிறதா? அப்ப உடனே இதை செய்யுங்க!

Priyanka Hochumin August 16, 2022 & 13:15 [IST]
How to File Register Cyber Crime Complaint: Online மூலம் பணம் காணாமல் போகிறதா? அப்ப உடனே இதை செய்யுங்க!Representative Image.

How to File Register Cyber Crime Complaint: இப்பெல்லாம் ஒரு கடைல போய் 10 ரூபாய்க்கு ஜூஸ் குடிச்சா கூட கைல காசு கொடுக்காம GPay, Paytm போன்ற ஆன்லைன் பேமெண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர். இது ஒருபுறம் நல்லது தான் ஏனெனில் யாரும் பணத்தை திருட முடியாதுல என்று தான் நினைப்போம். ஆனால் திருடர்கள் இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா போய் இப்ப டெக்னாலஜிய பயன்படுத்தி திருட ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே, தற்போதைய கால கட்டத்தில் ஆன்லைன் பணம் பரிவர்த்தனையில்லாமல் எதுவுமே நடக்காது என்ற நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம். இதனுள் முன்னிலையில் இருக்கும் GPay, Paytm, UPI பயன்படுத்தி அல்லது நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பவோ அல்லது பெறவோ போன்ற பயன்பாட்டில் பணம் மோசடி நடைபெறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது போன்ற சம்பவங்களை நீங்கள் ஒருவேளை மேற்கொண்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உடனே புகார் அளிக்கவும்!

எப்படி பிக்பாக்கெட் அடிப்பவர்கள் நம் கண் முன்னாள் திருடுவதால் நாம் கம்பிளைன்ட் கொடுக்கிறோம். ஆனால் இங்கோ யார் அந்த களவாணி என்று நமக்குத் தெரியாது. எனவே, அவரை கண்டறிந்து நமது பணத்தை மீட்க இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டலுக்கு (Cybercrime Portal) சென்று புகார் அளிக்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்!

  • முதலில் ஏதேனும் ஒரு வெப் பிரௌசருக்குள் சென்று cybercrime.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பிறகு File a Complaint என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளவும்.
  • இப்போ நீங்க ஒரு சில நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
  • பின்னர் File another Cybercrime என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி புகார் அளித்திருந்தால், அந்த அக்கவுண்ட் தொடர்பான விவரங்களை உள்ளிடவும்.
  • இல்லை நீங்கள் புது யூசராக இருந்தால் Click here for new User என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

லாகின் செய்வது எப்படி?

நீங்கள் நியூ யூசர் என்பதால் புது அக்கவுண்டை உருவாக்க Citizen Login என்பதை செலக்ட் செய்து, உங்களுடைய மாநிலம், பெயர் மற்றும் மொபைல் நம்பர் போன்ற விவரங்களை உள்ளிடவும்.

இது முடிந்த உடன் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP வந்திருக்கும். அதனை டைப் செய்து, அங்கு கொடுக்கப்பட்ட காய்ச்ச CAPTCHA-வை உள்ளிடவும்.

இப்பொழுது Submit என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த திரையில் தோன்றும் பக்கத்தில் முக்கிய விவரணமான சம்பவ விவரங்கள், சந்தேக நபரின் விவரங்கள், புகார் விவரங்கள், முன்னோட்டம் மற்றும் சமர்ப்பிப்பு என்னும் 4 பகுதிகளில் உள்ளிட வேண்டும்.

Incident Details என்னும் பகுதியின் கீழ் கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

அடுத்து செய்ய வேண்டியது...

இது முடிந்த பிறகு Save and Next என்பதை கிளிக் செய்யவும்.

Suspect Detail என்னும் பகுதியின் கீழ் உங்களுடைய பெயர், நீங்கள் எடுத்துச் செல்லப்போகும் அடையாளச் சான்றிதழ் அல்லது வேற ஏதேனும் முக்கிய ஆவணங்களை குறிப்பிடவும்.

Complaint Details என்னும் ஆப்ஷன் கீழ் உங்கள் இமெயில் ஐடி, போட்டோ ஆகியவற்றை உள்ளிடவும்.

இப்பொழுது ஒரு முறை நீங்கள் அளிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று சரி பார்த்து விட்டு Confirm and Submit பட்டனை கிளிக் செய்யுங்கள். இவ்ளோ தாங்க புகார் அளிக்கும் வழிமுறை!

நீங்கள் file செய்த கம்ப்ளெயின்டை PDF ஃபைலாகவும் கூட டவுன்லோட் செய்யலாம்.

How to File Register Cyber Crime Complaint, how to complaint in cybercrime, how to complaint in cybercrime online, how to file register cybercrime complaint online india.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்