Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ச்ச! இத்தனை நாளா இது தெரியாம போச்சே...எவ்ளோ பெரிய தவறு!

Priyanka Hochumin September 09, 2022 & 18:00 [IST]
ச்ச! இத்தனை நாளா இது தெரியாம போச்சே...எவ்ளோ பெரிய தவறு!Representative Image.

ஸ்மார்ட்போன் வருவதற்கு முன்னர் ஒரு விவரத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள நாம் பேப்பர், டைரி ஆகியவற்றை பயன்படுத்துவோம். ஆனால் இப்போது ஃபோனிலையே எல்லாத்தெயும் ஸ்டார் பண்ணி வச்சிகிட்டானால ரொம்பவே ஈஸியா போச்சு. அதுலையும் பாருங்க நாம பேப்பர்ல நோட் பண்ணி வசிக்கிற மாறி Notes App-ன்னு ஒன்னு இருக்கு. அதுல நாம்ப எதுவேனாலும் சேகரிச்சு வச்சிக்கலாம். ஆனா நமக்கு பட்டுன்னு ஞாபகத்துக்கு வருவது வாட்ஸ்அப் தான். நம்மகிட்ட இருக்கும் ஒரு விஷயத்தை பிறருக்கு அனுப்பாமல் நாமே எப்படி சேகரித்துக்கொள்ள முடியும் என்பதை தான் இந்த பதிவில் நாங்கள் விளக்கமாக சொல்ல இருக்கிறோம்.

அதற்கான முதல் ஆப்ஷன்...

உங்களுக்கு நீங்களே வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. அதில் முதல் ஆப்ஷன், உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பை பயன்படுத்தி ஏதேனும் ஒரு பிரௌசரை ஓபன் செய்துகொள்ளவும்.

அதற்கு பின்னர் அட்ரஸ் பாரில் wa.me// என்று டைப் செய்யவும்.

அதனை தொடர்ந்து நீங்கள் மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதற்கு முன்பு உங்களுடைய நாட்டின் கோட் (Country Code) -ஐயும் சேர்த்து டைப் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, நாம் இந்தியாவில் இருந்தால் wa.me//91 ஏ என்று டைப் செய்து பிறகு 10 டிஜிட் போன் நம்பரை டைப் செய்ய வேண்டும்.

இப்படியாக நீங்கள் செய்த பிறகு, வாட்ஸ்அப் வெப்-ஐ பயன்படுத்துமாறு கேட்கும் விண்டோ ப்ராம்ப்ட்டை பெறுவீர்கள்.

பிறகு "Continue to chat" என்னும் மெசேஜ் உடன் ஒரு புது விண்டோ ஓபன் ஆகும்.

அந்த ஆப்ஷனை செலக்ட் செய்த உடன், உங்கள் சொந்த சாட் உடனான WhatsApp Web அல்லது WhatsApp Desktop ஆப் ஓப்பன் ஆகும்.

அவ்ளோ தாங்க! இனிமேல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பி முக்கிய தகவல்களை சேகரித்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் போட்டோ, வீடியோ, வெப் லிங்க் போன்ற அனைத்தையும் நீங்கள் ஷேர் செய்துகொள்ளலாம்.

அடுத்தது ரொம்பவே சிம்பிள்!

உங்களுடைய போனில் ஒரே ஒரு காண்டாக்டை சேர்த்து வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்குங்கள். உருவாக்கிய பின்னர் அந்த நபரை டெலீட் செய்துவிட்டு உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம். அவ்ளோ தான் இது ரொம்பவே ஈஸியான மெத்தெட்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்