Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

இந்த மொபைல் இவ்ளோ விலை கம்மியா..? வாங்குனா இந்த மொபைல் தான் வாங்கணும்..! | Oppo Reno 10, Reno 10 Pro, Reno 10 Pro+

Gowthami Subramani Updated:
இந்த மொபைல் இவ்ளோ விலை கம்மியா..? வாங்குனா இந்த மொபைல் தான் வாங்கணும்..! | Oppo Reno 10, Reno 10 Pro, Reno 10 Pro+Representative Image.

Oppo நிறுவனம் அட்டகாசமான வடிவமைப்புடனும், கண்ணைக் கவரும் நிறங்களிலும் Oppo Reno Series மொபைல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது மே 24, 2023 ஆம் நாளில் சீனாவில் அறிமுகமானது. இந்தியாவில் ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் அறிவிப்பிற்கு முன்பே, Oppo Reno Series மொபைல்களின் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

இந்தியாவில் Oppo Reno 10 Series

Oppo Reno 10 Series இந்தியாவில், ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Oppo Reno 10 Seies

இந்த சீரியஸில், Oppo Reno 10, Reno 10 Pro, Reno 10 Pro Plus போன்ற மொபைல்கள் உள்ளன.

Oppo Reno 10 அடிப்படை மாடல் 8GB RAM மற்றும் 120GB இன்டர்நல் மெமரியைக் கொண்டிருக்கும். மேலும், Oppo Reno 10 Pro மற்றும் Oppo Reno 10 Pro+ 5G மொபைல் இந்தியாவில் 12GB RAM மற்றும் 256GB RAM சேமிப்பைக் கொண்டுள்ளது.

Oppo Reno 10 Series Price in India

இந்தியாவில் Oppo Reno 10 Series விலைகளின் பட்டியலைக் காண்போம்.

Oppo Reno 10 இந்தியாவில் ரூ.31,000 முதல் ரூ.33,000 வரை இருக்கும்.

Oppo Reno 10 Pro-ன் விலை ரூ.35,000 முதல் ரூ.39,000 வரை இருக்கும்.

Oppo Reno 10 Pro Plus -5G மொபைலின் விலையானது ரூ.41,000 முதல் ரூ.43,000 வரை இருக்கும்.

Oppo Reno 10 Series Specifications

OS-ஐப் பொறுத்த வரை, Oppo Reno 10 Series ஆனது Boot Android 13 OS-ஐக் கொண்டுள்ளது.

டிஸ்பிளேயைப் பொறுத்த வரை, 6.74 inch OLED டிஸ்பிளேயுடன், 1.5K புதுப்பிப்பு வீதத்தைப் பெற்றுள்ளது. 14000 nits வரையிலான peak brightness-ஐக் கொண்டிருக்கிறது. Reno 10 மொபைல் ஆனது, 950 nits ஐக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்த வரை, மூன்று மொபைல்களுமே வெவ்வேறு பிக்சலுடன் காணப்படுகிறது. Reno 10 ஆனது, 64MP primary Omnivision OV64B sensor உடன் f/1.7 aperture-ஐயும், 8MP IMX355 அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 32MP IMX709 2X டெலிபோட்டா கேமராவைக் கொண்டுள்ளது. Reno 10 Pro ஆனது, 50MP Sony IMX890 மெயின் கேமரா உடன் OIS மற்றும் f/1.8 aperture, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32MP டெலிபோட்டோ லென்ஸைக் கொண்டிருக்கிறது. Reno 10 Pro Plus ஆனது, 50MP Sony IMX890 மெயின் கேமரா உடன் OIS, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஆம்னிவிஷன் OV64B சென்சார் உடன் 3x optical zoom and 120x digital zoom-ஐக் கொண்டுள்ளது.

முன் பக்க கேமராவைப் பொறுத்த வரை, 32MP ஷூட்டருடன் போட்டோ மற்றும் வீடியோ கால்களுக்கு உதவுகிறது.

பேட்டரியைப் பொறுத்தவரை, Oppo Reno 10 மற்றும் Reno 10 Pro இரண்டும் 4600mAh பேட்டரி உடன், 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், Oppo Reno 10 Pro+ ஆனது, 4700mAh பேட்டரி உடன் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டிருக்கிறது.

 

 

Oppo Reno 10

Oppo Reno 10 Pro

Oppo Reno 10 Pro Plus

டிஸ்பிளே

6.70 இன்ச்

6.74 இன்ச்

6.70 இன்ச்

Processor

Qualcomm Snapdragon 778G

MediaTek Dimensity 8200

Qualcomm Snapdragon 8+ Gen 1

RAM

8GB

16GB

16GB

Storage

256GB

256GB

256GB

பின்புற கேமரா (Front Camera)

32 மெகாபிக்சல்

32 மெகாபிக்சல்

32 மெகாபிக்சல்

முன்பக்க கேமரா (Rear Camera)

64 MP + 32 MP + 8 MP

50 MP + 32 MP + 8 MP

50 MP + 8 MP + 2 MP

Battery

4600mAh

4600mAh

4700mAh

புதுப்பிப்பு வீதம் (Resolution)

1080 * 2412 Pixels

1240 * 2772 Pixels

1080 * 2412 Pixels

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்