Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

How To: வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட்ஸை ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan Updated:
How To: வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட்ஸை ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி? Representative Image.

இந்த காலத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், தன் யூசர்ஸ் வேற எந்தவொரு மெசேஜிங் ஆப் பக்கமும் திரும்பிவிட கூடாது என்பதற்காக பல அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது வாட்ஸ்அப். இதனாலையே, நம்மில் பலரும் மற்ற ஆப்களை உபயோகப்பதில் ஆர்வம் காட்டுவதே கிடையாது. அதுவும், போட்டோ, வீடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட் வந்ததிலிருந்து வாட்ஸ்அப்பின் மதிப்பி எங்கையோ சென்றுவிட்டது தான் என்று சொல்ல வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில், கிரியேட் போல்ஸ் (create polls) என்ற அம்சமும் அறிமுகமானது. ஒரு குறிப்பிட்ட தலைப்பை பற்றி கருத்துக்கணிபுகளை நிகழ்த்தி, அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர உதவும் இந்த அம்சம் உண்மையில் பலரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் தற்போது பயனர் அனுபவத்தை மேம்படுத்த உங்கள் வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டஸாகப் பகிரும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. 

தற்போது, ​​வாட்ஸ்அப் பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களாக படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில், இனி வாய்ஸ் நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம். இந்த திட்டமிட்டுள்ள வசதியை வாட்ஸ்அப் செயலியின் iOS பீட்டா பதிப்பில் சோதித்து வருகிறது.

வாய்ஸ் நோட்ஸை ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

எப்பவும் போல ஸ்டேட்டஸ் பகுதிக்கு செல்லுங்கள். பின்னர், உங்கள் கருத்துகளைத் டைப் செய்யக்கூடிய இடத்திற்குக் கீழே தோன்றும் மைக்ரோஃபோன் ஐகானை அழுத்தி உங்கள் குரலை ரெகார்ட் செய்து கொள்ளுங்கள். இதை உங்கள் தனியுரிமை அமைப்புகளுக்குள் நீங்கள் தேர்வு செய்யும் நபர்களுடன் மட்டுமே உங்கள் குரல் நிலைப் புதுப்பிப்புகள் பகிரப்படும். அவை எப்போதும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். எனவே, பயம் தேவையில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்