Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இஷ்டத்துக்கு பாக்கலாம்...Airtel, Jio-வின் நியூ பிராட்பேண்ட் பிளான்...எல்லாமே ஃப்ரீ தான்!!

Priyanka Hochumin Updated:
இனி இஷ்டத்துக்கு பாக்கலாம்...Airtel, Jio-வின் நியூ பிராட்பேண்ட் பிளான்...எல்லாமே ஃப்ரீ தான்!!Representative Image.

கொரோனா வந்தாலும் தான் வந்துச்சு வீட்ல இருந்து வேலை பார்க்குற எல்லா குடும்பத்திற்கும் ரீசார்ஜ் பண்ணியே சொத்து அழிஞ்சிடும் போல. ஏன்னா வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள், ஆன்லைன் கிளாஸ் கவனிக்கும் பிள்ளைகள், அது இல்லாம OTT-ல படம் பாக்க ஒவ்வொரு ஆப்பிற்கும் தனியா இப்படி மாத்தி மாத்தி ரீசார்ஜ் பிளான் பண்ணனும். அப்ப கணக்கு போட்டு பாருங்க எவ்ளோ செலவாகும்னு. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட தான் Airtel மற்றும் Jio டெலிகாம் நிறுவனங்கள் சில புது பிளான்களை அறிமுகப்படுகிறது. இதுல மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் அடங்குமாம். வாங்க என்னென்னு பாப்போம்.

இனி இஷ்டத்துக்கு பாக்கலாம்...Airtel, Jio-வின் நியூ பிராட்பேண்ட் பிளான்...எல்லாமே ஃப்ரீ தான்!!Representative Image

OTT தொகுப்புடன் கூடிய JioFiber ப்ரீபெய்ட் திட்டங்கள்

1.JioFiber ரூ 999 பிளான் - இது வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 150Mbps இன்டர்நெட் டேட்டா ஸ்பீட் கிடைக்கும். மேலும் உங்களுக்கு மிகவும் பிடித்த அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், சோனி லிவ், ஜீ 5 மற்றும் மேலும் 10 OTT சேனல்கள் உள்ளிட்ட OTT பயன்பாடுகளுக்கு ப்ரீ வாய்ஸ் கால் மற்றும் சந்தா நமக்கு கிடைக்கும். சூப்பர்ல!

2. JioFiber ரூ.1499 பிளான் - இதில் ஸ்பீட் அதிகம் ஆனா OTT கொஞ்சம் கம்மியா கிடைக்கும். அதாவது 30 நாட்கள் வரை 300 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா, உடன் Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar மற்றும் மேலும் 14 OTT சேனல்களுக்கான இலவச சந்தா வழங்கப்படும்.

3. JioFiber ரூ.2499 பிளான் - இது ஒரு ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த பிளானை பயனர்கள் பயன்படுத்தினால் 500Mbps இன்டர்நெட் ஸ்பீட் உடன் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். அத்துடன் Netflix, Amazon Prime, Disney+ Hotstar மற்றும் 14 OTT சேனல்களுக்கான இலவச சந்தா ஆகியவையும் அடங்கும்.

4. JioFiber ரூ.3999 பிளான் - இதில் Netflix, Amazon Prime சேர்த்து மொத்தம் 17 OTT சேனல்களுக்கான இலவச சந்தாவும், 30 நாட்களுக்கு அன்லிமிடெட் 1Gbps வேகத்தில் டேட்டாவும் வழங்கப்படுகிறது.

5. JioFiber ரூ.8499 திட்டம் - 30 நாட்களுக்கு 1Gbps வேகத்தில் 6600GB டேட்டாவைப் பெறுவார்கள். OTT தொகுப்பில் Netflix, Amazon Prime வீடியோ மற்றும் 15 OTT சேனல்களுக்கான இலவச அணுகல் உள்ளது. இது போதுமே நமக்கு எல்லாமே பக்கா முடியும்.

இனி இஷ்டத்துக்கு பாக்கலாம்...Airtel, Jio-வின் நியூ பிராட்பேண்ட் பிளான்...எல்லாமே ஃப்ரீ தான்!!Representative Image

OTT தொகுப்புடன் கூடிய ஏர்டெல் பிராட்பேண்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்

1. Airtel ரூ.999 பிளான் - நமக்குத் தேவையான அன்லிமிடெட் கால்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றின் OTT சந்தா 200Mbps வேகம் வரை வழங்குகிறது. ஆனால் கூடுதலாக நம்முடைய பயனளிக்கும் விதமாக எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விஐபி சர்வீஸ், அப்பல்லோ 24|7க்கான சந்தா, ஃபாஸ்டேக் மற்றும் விங்க் பிரீமியத்தில் கேஷ்பேக் போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

2. Airtelரூ.1498 பிளான் - இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 300Mbps ஸ்பீட் இன்டர்நெட் உடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் Netflix Basic, Disney+ Hotstar, Amazon Prime, Xstream Premium, VIP சர்வீஸ், Apollo 24|7க்கான சந்தா, FASTag மற்றும் Wink Premium ஆகியவற்றுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

3. Airtel ரூ.3999 பிளான் - இதில் அதே போன்ற நன்மைகள் கிடைக்கும் இருப்பினும் இன்டர்நெட் ஸ்பீட் அதிவேகத்தில் வழங்கப்படுகிறது. இது 1Gbps ஸ்பீட், அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களை வழங்குகிறது. Netflix Premium, Disney+ Hotstar, Amazon Prime, Xtream Premium, VIP சேவை, Apollo 24|7க்கான சந்தா, FASTag மற்றும் Wink Premium ஆகியவற்றுக்கான இலவச சந்தா ஆகியவை இதில் அடங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்