Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதுக்குடா.. இந்த மெயில்... இதை அப்படி வராம செய்வது என்ற குழப்பமா.. இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் !

Manoj Krishnamoorthi Updated:
எதுக்குடா.. இந்த மெயில்... இதை அப்படி வராம செய்வது என்ற குழப்பமா.. இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் !Representative Image.

இப்போது எல்லாம் எங்கு சென்றாலும் எந்த விண்ணப்பம் பதிவு செய்தாலும் நாம் மெயில் ஐடி கொடுப்பது சாதரணமாக மாறிவிட்டது. இவ்வாறு நம் மெயில் ஐடியை பல இடங்களில் கொடுப்பதால் நமக்கு தேவையில்லாத மெசேஜ்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மெசேஜ் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

எதுக்குடா.. இந்த மெயில்... இதை அப்படி வராம செய்வது என்ற குழப்பமா.. இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் !Representative Image

தேவையில்லாத மெயில் அழிப்பது எப்படி?

நம் மெயில் ஐடிக்கு நம் தேவையில்லாத தகவல் வராமல் இருக்க, வரும் மெசேஜ் தானாக டெலிட் ஆக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காண்போம். 

பொதுவாக இந்த தேவையில்லாத மெயிலை நாம் எளியதாக நிறுத்தலாம். ஆம்..... நமக்கு இந்த மெயில் ஐடியில் இருந்து வரும் மெசேஜ் வேண்டாமோ. அதில் 1 மெயிலை க்ளிக் செய்து கீழே வந்தால் Unsubscribe என இருக்கும். இதை அழுத்தி அதன் பின் கேட்டும் உறுதி கொடுத்தால் மெயில் வராது. அந்த மெயில் ஐடிக்கு நாம் கொடுத்த Subscribe கேன்சல் ஆகிவிடும். 

ஒருவேளை Unsubscribe செய்த பின்னும் மெசேஜ் வந்தால் அப்போது Block செய்யலாம். இதற்கு நமக்கு வரும் மெயிலை திறந்தால் ஒரு 3 புள்ளி இருக்கும். அதை க்ளிக் செய்து Block பண்ணிய பிறகு இந்த மெயிலில் இருந்து மெசேஜ் வராது. 

சில சமயம் நாம் Unsubsribe அல்லது Block செய்த பின்னரும் வேறு ஐடி மூலம் மெசேஜ் வந்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. தேவையற்ற மெசேஜ் வரும் புதிய மெயிலை ஓபன் செய்து 3 புள்ளி ஆப்சனை க்ளிக் செய்து, பின்னர் Filter message Like this என்பதை அழுத்தி கொள்ளவும். இப்போது இதில் Create Filter என்பதில் Skip the inbox என இருக்கும். இந்த ஆப்சனை கொடுத்தால் அந்த மெயில் ஐடியில் இருந்து வரும் மெசேஜ் inbox வராமல் தானாக செலக்ட் செய்து delete ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்