Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நத்திங் போன் (2): முன்பதிவு தொடக்கம்; ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த நிறுவனம்!

Abhinesh A.R Updated:
நத்திங் போன் (2): முன்பதிவு தொடக்கம்; ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த நிறுவனம்!Representative Image.

நத்திங் நிறுவனத்தின் புதிய Phone (2) ஸ்மார்ட்போனை ஜூலை 11ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இதற்கான முன்பதிவை நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் போன் (2) முன்பதிவு ஜூலை 8 வரை மட்டுமே இருக்கும். இதை நாம் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் மூலம் ரூ.2000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த போனுடன் பல புதிய அம்சங்களை நத்திங் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமாக நத்திங் ஓஎஸ் (2) இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பிரத்யேக இந்த இயங்குதளம் மிகவும் லைட்டான பயனர் அனுபவத்தை வழங்கும். மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் இயங்குதள புதிப்பிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் (2): முன்பதிவு தொடக்கம்; ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த நிறுவனம்!Representative Image

நத்திங் போன் (2) அறிமுகம் சலுகைகள்

  1. நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்வோருக்கு குறிப்பிட்ட வங்கிகள் மூலம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
  2. நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோர் ரூ. 1,299 மதிப்புள்ள போன் 2 மாடலுக்கான அதிகாரப்பூர்வ பேக் கேஸ்-ஐ வெறும் ரூ. 499-க்கு வாங்கலாம்.
  3. ரூ.999 மதிப்புள்ள நத்திங் போன் 2 மாடலுக்கான ஸ்கிரீன் ப்ரோடெக்டரை ரூ.399 விலையில் பெற முடியும்.
  4. ரூ.8 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் இயர் ஸ்டிக் மாடலை ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் வாங்கிடலாம்.
  5. ரூ.2 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் பவர் அடாப்டரை ரூ. 1,499 விலையில் வாங்கிடலாம்.
நத்திங் போன் (2): முன்பதிவு தொடக்கம்; ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த நிறுவனம்!Representative Image

நத்திங் போன் (2) முன்பதிவு செய்வது எப்படி

நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் நடைபெறுகிறது. போனை வாங்க ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் செலுத்தி நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 11ஆம் தேதி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அதன் ரேம், ஸ்டோரேஜ் வேரியன்டை உறுதிப்படுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ஸ்மார்ட்போனிற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. போன் வாங்க விருப்பம் இல்லை எனில் நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.

நத்திங் போன் (2): முன்பதிவு தொடக்கம்; ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த நிறுவனம்!Representative Image

நத்திங் போன் (2) அம்சங்கள்

  • குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது
  • இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்படுகிறது
  • நத்திங் ஒஎஸ் 2.0
  • Glyph இண்டர்ஃபேஸ் லைட்
  • 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
  • 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்