Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Meteor Shower on Earth: Meteor Shower-ஐ பார்த்திருக்கீங்களா...இல்லைனா சரி...இன்னும் 2 நாட்களில் நடக்கும்! எங்கு? எப்பொழுது?

Priyanka Hochumin May 29, 2022 & 15:45 [IST]
Meteor Shower on Earth: Meteor Shower-ஐ பார்த்திருக்கீங்களா...இல்லைனா சரி...இன்னும் 2 நாட்களில் நடக்கும்! எங்கு? எப்பொழுது? Representative Image.

Meteor Shower on Earth: பூமியை நோக்கி விண்கல் மழை எனப்படும் Meteor Shower இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறுவதாக நாசா குறிப்பிட்டுள்ளது. இது எங்கு மற்றும் எப்போது நடைபெறும் என்று தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.

விஞ்ஞானிகளின் கருது

இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அறிவுக்கு அப்பார் பட்ட நிறைய நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகிறது. ஆனால் நம்முடைய அவசர வாழ்க்கை காரணாமாக நம்மால் அதை கவனித்திட முடிய. எனவே விஞ்ஞானிகள் அதனை அறிவியல் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகின்றனர். அந்த வகையில்  இந்த நிகழ்வு 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட லியோனிட் விண்கல் மழை (leonid meteor shower) போன்று மிகவும் தீவிரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இதுவரை நடந்து விண்கல் மழையில் வானியலாளர்களையே (astronomers) பிரமிப்பில் ஆழ்த்தியது டவ் ஹெர்குலிட்ஸ் விண்கல் மழை (Tau herculids meteor shower) தான் பிரகாசமான விண்கல் பொழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதே போல் வானியல் ஆப் ஸ்டார் வாக், இந்த நிகழ்வு சாதாரண விண்கல் புயலை விட மிகவும் பிரகாசமான காட்சியான 'விண்கற்கள் ஸ்ட்ரோம் (meteor strom)' என்ற அரிய நிகழ்வை தோற்றுவிக்கும் என்பதை கணித்துள்ளது. 

செவ்வாய் கிரகத்தில் மர்ம கதவு...இதன் பின்னணி...மற்ற பிரபஞ்சத்திற்கு நுழைவு வாசலா?

Meteor Shower என்றால் என்ன?

இது வானில் நடைப்பெறும் ஒரு நிகழ்வாகும். வானத்திற்கு குறுக்கே நிறைய விண்கற்கள் நகரும் பொழுது ஒளி பரவலைக் காண முடியும். அது எதனால் ஒளி தெரிகிறது என்றால், அவை நகரும் பொழுது சிறிய துகள்களை (smaller particles) உதிர்வதால் ஒளிரும் வால் போன்று காட்சியளிக்கிறது.

Tau Herculids விண்கல் மழைக்கு பின்னால் என்ன வால் நட்சத்திரம் உள்ளது?

Schwassmann Wachmann 3 அல்லது SW 3 என்பது 1995 ஆம் ஆண்டு பல துண்டுகளாக உடைந்த வால்மீனாகும். அது தற்போது விண்வெளியில் கொஞ்சம் ஜோஞ்சமம்ங்க ஒன்றாகி மொத்தமாக 70 துண்டுகளைக் கொண்டு மிதந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விண்வெளி பாறைகள் வானத்தில் குறுக்கே நகரும் பொழுது டவ் ஹெர்குலிட்ஸ் விண்கல் மழையை தோற்றுவிக்கும். அதனை பூமியில் இருந்து இரவு நேரத்தில் பார்க்கும் பொழுது Meteor Shower போல் காட்சியளிக்கும். இதனை போன்று தான் அடுத்த இரண்டு நாட்களுக்கும் நடக்கும் Meteor Shower இருக்குமா?

எப்பொழுது, எங்கு நடக்கும்?

நாசா அறிவித்த தகவல் படி டவ் ஹெர்குலிட்ஸ் விண்கல் மழை வானத்தில் 5.00 GMT (10.30 AM IST) மணிக்கு மே 31 ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும். இந்த Meteor Shower அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மத்திய தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நன்றாக தெரியும். துரதிஷ்ட வசமாக இந்தியாவில் அப்பொழுது பகல் என்பதால் நம்மால் அதை பார்க்க முடியுமான. இருப்பினும் நீங்கள் கவலைப் பட வேண்டாம். நிறைய நியூஸ் மற்றும் யூடியூப் சேனல்களில் இது ஒளிபரப்பாகும், எனவே அதனை நாம் பார்த்து மகிழலாம்.

விஞ்ஞானிகள் அதிர்ச்சி...பூமிக்கு அசம்பாவிதத்தை ஏற்படுத்தும்...ராட்சஷ வால் நட்சத்திரம்!

நிஜமா பார்க்க முடியுமா?

ஒரு சில நேரங்களில் விண்கல் மலையை நாம் தெளிவாக பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த பாறைகள் விண்வெளியில் இருந்து வனத்திற்கு குறுக்கே வேகமாக நகரும் பொழுது நன்கு பிரகாசமாக நமக்குத் தெரியும். ஆனால் அது மெதுவாக நகர்ந்தால் நம்மால் அதை பார்க்க முடியாது. எனவே, நாம் எதை பாப்போம் என்று நமக்கு தெரியாது, இருப்பினும் நல்ல பிரகாசமான விண்கல் மழையை பார்ப்போம் என்று நம்புவோம்" என்று நாசா தெரிவித்துள்ளது.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்