Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NASA Doorway Mars: செவ்வாய் கிரகத்தில் மர்ம கதவு...இதன் பின்னணி...மற்ற பிரபஞ்சத்திற்கு நுழைவு வாசலா?

Priyanka Hochumin May 15, 2022 & 14:30 [IST]
NASA Doorway Mars: செவ்வாய் கிரகத்தில் மர்ம கதவு...இதன் பின்னணி...மற்ற பிரபஞ்சத்திற்கு நுழைவு வாசலா?Representative Image.

NASA Doorway Mars: மனிதனின் அறிவு பசியாலும், தொழில்நுட்ப புரட்சியாலும் யாருமே நினைத்து பார்க்கமுடியாத நிறைய கண்டுபிடுங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இவை என்ன தான் இயற்கைக்கு எதிராக இருந்தாலும், நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் சூரிய குடும்பத்தில் பூமியில் மற்றும் தான் உயிர் வாழும் தகுதி இருப்பதால், மக்கள் இங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு வேலை இந்த பூமி அழித்துவிட்டால், என்ன செய்வது? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றும். அப்படி தோன்றிய கேள்விக்கு விடை கண்டுப்பிடிக்க பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள். மனிதர்களாகிய நாம் சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகத்திற்கும் செல்லும் வாய்ப்பு கிடையாது. அங்கு காற்று, தண்ணீர் போன்றவை இருக்கா ? இல்லையா? என்று தெரியாது. எனவே, அதைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு இயந்திரத்தை தயாரித்து அதை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன? என்ற யோசனையின் பலன் தான் இந்த நிகழ்வு. 

நாசாவின் க்யூரியாசிட்டி மார்ஸ் ரோவர்  

1961 முதல் ஆராய்ச்சிகளில் மூத்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாசாவின் க்யூரியாசிட்டி மார்ஸ் ரோவர் (nasa curiosity rover) செதுக்கப்பட்ட கதவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இது பலருக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. இது என்னவாக இருக்கும்? ஒரு வேலை வேற்றுகிரக வாசிகள் இதை செய்திருப்பார்களா? இல்லை இது மற்ற பிரபஞ்சத்திற்கான நுழைவு வாயிலாக இருக்குமா? என்று அனைவரும் தலையை பிச்சுக்கொண்டு அதற்கான விடையை தேடுகின்றனர். 

பெரும்பாலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் மார்ஸ் ரோவர் அனுப்பிய இந்தப் புகைப்படம் அங்கு வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான ஆதாரமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த கதவு செவ்வாய் கிரகம் பரப்பளவில் இருக்கும் பாறைகளுக்கு நடுவில் ஒரு மறைவிடமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.   

Europa இல் ஏலியன்கள்...இருப்பதாக வெளியான...திக் திக் ஆதாரங்கள்!

இந்த கதவு இதனால் வந்திருக்கலாமோ?

அப்படி மார்ஸ் ரோவர் (nasa curiosity rover) அனுப்பிய இந்த புகைப்படத்தை பற்றி நிறைத்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர். மே 4 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தகவல் வெளியானது. மேலும் இது போன்ற நிறைய நிலநடுக்கங்களை செவ்வாய் கிரகம் மேற்கொண்டு வருகிறது. இந்த கதவு உருவாக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும் இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் இது என்ன? எப்படி உருவானது? என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோவேரில் (nasa curiosity rover) இருக்கும் மாஸ்ட் கேமரா மூலம் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அது Greenhugh Pediment எனப்படும் புவியியல் பகுதியில் எடுக்கப்பட்டதாகவும் நாசா தெரிவிக்கிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் இந்த (NASA Doorway Mars) கதவு வாசலை Door Way என்று குறிப்பிடுகின்றனர். இது நிஜமாகவே சில சென்டிமீட்டர் உயரம் மற்றும் சில அங்குலம் அளவும் கொண்டு இருக்கிறது. இது இயற்கையாக இருக்கிறதா? அல்லது உருவாக்கப்பட்டதா? என்று அடுத்தடுத்து ஆராய்ச்சியில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் அதிர்ச்சி...பூமிக்கு அசம்பாவிதத்தை ஏற்படுத்தும்...ராட்சஷ வால் நட்சத்திரம்!

இது பூவா?

மேலும் கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தில் இருந்து மார்ஸ் ரோவர் ஒரு விசித்திரமான புகைப்படத்தை எடுத்தி அனுப்பியுள்ளது. ஒரு பூ போலத் தோற்றமளிக்கும் இது, ஒரு நுட்பமான கரிம அமைப்பைக் (organic structure) கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தில், வாழ்க்கைக்கான ஒரு நம்பிக்கையாக திகழ்கிறது. இது நிஜமாகவே ஒரு உயிருள்ள பூ கிடையாது, நீரால் உருவாகியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கனிம உருவாக்கம் செவ்வாய் கிரகத்தின் நீரிலிருந்து படியும் தாதுக்களால் உருவாகும் நுட்பமான கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Science News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Representative Image.  ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !

Representative Image.  ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

Representative Image.  இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!

Representative Image.  அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை

Representative Image.  ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்